Connect with us

நெஜ துப்பாக்கியை வச்சி ட்ரெயினிங்!.. ஜெயிலருக்கு போட்டியாக களம் இறங்கும் உலகநாயகன்..

News

நெஜ துப்பாக்கியை வச்சி ட்ரெயினிங்!.. ஜெயிலருக்கு போட்டியாக களம் இறங்கும் உலகநாயகன்..

Social Media Bar

சினிமாவில் நடிப்புக்காக உச்ச பட்ச அளவில் உடலை வருத்தி முயற்சிகள் எடுக்கும் நடிகர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர். பொதுவாக கமர்ஷியல் நடிகர்கள் கொடுத்த கதாபாத்திரத்தை அப்படியே நடிப்பார்கள். கொஞ்சம் மெனக்கெட்டு நடிக்க வேண்டும் என்றால் கூட நடிக்க மாட்டர்கள்.

அதில் கமல்ஹாசன், விக்ரம் மாதிரியான சில நடிகர்கள் மட்டும் விதிவிலக்கு. தமிழ் சினிமாவில் வெகு காலங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் மூலமாக அறிமுகமானார் நடிகர் கமல்ஹாசன். விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தது.

அதனை தொடர்ந்து ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் தற்சமயம் விக்ரம் திரைப்படத்தின் வசூலை மிஞ்சியுள்ளது. இதனால் ரஜினிக்கும் கமல்ஹாசனுக்கும் மறுபடியும் போட்டி துவங்கிவிட்டது என பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு ஏற்றாற் போல அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் படம் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் கமல்ஹாசன். தற்சமயம் நிஜ துப்பாக்கிகளை கொண்டு சுடுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறார். படங்களில் போலி துப்பாக்கிகள்தானே பயன்படுத்துவார்கள். பிறகு எதற்கு நிஜ துப்பாக்கிகளை கொண்டு பயிற்சி எடுக்கிறார் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நிஜ துப்பாக்கியை பயன்படுத்தினால்தான் போலி துப்பாக்கியையும் நிஜ துப்பாக்கி போலவே கையாள முடியும். எனவேதான் கமல் நிஜ துப்பாக்கியில் பயிற்சி எடுக்கிறார் என கூறப்படுகிறது.

டிவிட்டரில் வெளியாகியுள்ள இந்த வீடியோ கமலின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

To Top