யாருய்யா இந்தாளு.. வந்து ஒரு வருஷத்தில் நம்ம இடத்தை பிடிச்சிட்டார்.. கமல் ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர்.!
கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவில் கடந்து வந்த பாதைகள் மிகவும் பெரிது என்று கூறலாம்.
எப்போதுமே கமலும் ரஜினியும் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களாகவே இருந்தது கிடையாது. நிறைய சமயங்களில் நிறைய நடிகர்கள் அவர்களது இடத்தை மிக எளிதாக பிடித்திருக்கின்றனர்.
ஆனால் கமல் ரஜினி மாதிரி அவர்களால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை அப்படியான நடிகர்களில் டி ராஜேந்திரனும் ஒருவர். தமிழ் சினிமாவில் சோக கிளைமாக்ஸ் முடிவுகளை வைத்து கூட ஒரு கதாநாயகன் மிகப் பிரபலமாக முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் டி ராஜேந்திரன்.

இது குறித்து கமலஹாசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்பொழுது வந்த ஒரு வருடத்திலேயே டி ராஜேந்திரன் எங்களிடத்தை பிடித்து விட்டார். எங்களது போஸ்டர்கள் இருந்த இடத்தில் எல்லாம் அவருடைய போஸ்டர் தான் இருந்தது.
அப்பொழுது எனக்கு ஒரு கேள்வி வந்தது யார் இந்த ஆளு வந்து ஒரு வருஷம் கூட ஆகலை. அதுக்குள்ள நம்மளோட இடத்தை பிடித்து விட்டாரே என்று எனக்கு தோன்றியது என்று அந்த நிகழ்வை கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.