Tamil Cinema News
ஹைதராபாத்தில் நான் பார்த்த ஏலீயன்.. ஆடிப்போன விடிவி கணேஷ்..!
நடிகர் விடிவி கணேஷ் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகர் ஆவார். பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட அவரது காமெடிக்கு தனிப்பட்ட வரவேற்பு உண்டு.
அதனால் தான் வி.டி.வி கணஷ்க்கு ஹிந்தி திரைப்படமான ஜவான் திரைப்படத்தில் கூட நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் அவருடன் தன்னுடைய அனுபவத்தை சந்தானம் ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார்.
அதில் அவர் கூறும் பொழுது ஒருமுறை நானும் சிம்புவும் அமர்ந்திருந்த பொழுது எங்கள் அருகில் வந்த வி.டி.வி கணேஷ் பெங்களூரில் ஒரு ஏலியனை பார்த்ததாக கூறினார். எப்போதுமே அவர் எங்களிடம் பொய் மட்டும் தான் கூறுவார்.
மேலும் அவர் கூறும்போது சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சென்றதே அந்த ஏலியனை பார்க்கதான். அந்த ஏலியனை தான் நானும் பெங்களூரில் பார்த்தேன் என்று கூறினார். எத்தனை நாளைக்கு இப்படியே பொய் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார் என்று தெரியவில்லை என நகைச்சுவையாக அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் சந்தானம்.
