News
சிவாஜியும் எம்.ஜி.ஆரும் எனக்கு செஞ்சதுக்கு இப்ப கைமாறு செய்யுறேன்.. கமல் அந்த விஷயத்தை செய்ய இதுதான் காரணம்.!
Actor Kamal Haasan cannot praise the actors of the current generation that much. But now a days we can see that he is praising like that. He explained the reason for that.
விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு கமல்ஹாசன் மொத்தமாக மாறி இருப்பதை தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் பார்க்க முடியும். பெரும்பாலும் எந்த ஒரு நடிகரையும் புகழ்ந்து கமல்ஹாசன் மேடைகளில் பேசி பார்க்க முடியாது.
அப்படி அவர் பேசினாலும் கூட அவரை விட மூத்த நடிகர்களாக இருக்கும் சிவாஜி, ரஜினி போன்றவர்களைதான் பேசுவார். இல்லையென்றால் அவருக்கு சமமான நடிகர்களான ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை பற்றி பேசுவார்.
கமல்ஹாசன் அதை செய்ய காரணம்:
இப்போது இருக்கும் இளம் நடிகர்கள் பற்றி அவர் பெரிதாக பேசியது கிடையாது. ஆனால் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிப் பிறகு தொடர்ந்து இப்போது இருக்கும் நடிகர்களை வைத்து இயக்கும் திரைப்படங்களை தயாரிக்க துவங்கினார் கமல்ஹாசன்.

அப்படியாக அவர் இயக்கி வரும் திரைப்படங்கள் குறித்த ப்ரமோஷனில் பேசும்பொழுது அந்த நடிகர்களை புகழ்ந்து பேசி வந்தார் கமல்ஹாசன். ஏன் கமல் இப்படி செய்கிறார் படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்கிறாரா? என்பது ஒரு கேள்வியாக மக்கள் மத்தியில் எழத் துவங்கியது.
இது குறித்து ஒரு மேடையில் பதிலளித்த கமல்ஹாசன் கூறும் பொழுது எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே நல்ல நடிகர் என்று கூறி என்னை கைகாட்டி விட்டு சென்றார்கள். இப்பொழுது அந்த நன்றி கடனை நான் தீர்க்க வேண்டாமா? நான் இப்பொழுது யார் நல்ல நடிகர்கள் என்று காட்ட வேண்டாமா? அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.
