Cinema History
MGR: எம்.ஜி.ஆர் பல தடவை சாப்பிட கூப்பிட்டும் வராத காமராஜர்!.. இதுதான் காரணம்!..
Actor MGR : தமிழ் சினிமா நடிகர்களில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றவர் நடிகர் எம்.ஜி.ஆர். மற்ற திரைத்துறையினரை போலவே எம்.ஜி.ஆரும் கூட நாடகத்தில் நடித்து பிறகு கஷ்டப்பட்டுதான் சினிமாவிற்கு வந்தார். அதன் பிறகு அரசியலில் ஆர்வம் கொண்ட எம்.ஜி.ஆர், அப்போது வளர்ந்து வந்த கட்சியாக இருந்த தி.மு.க கட்சியில் சேர்ந்தார்.
அதன் பிறகு தி.மு.க கட்சியில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தனி கட்சி துவங்கி பெரும் வெற்றியை பெற்று முதல்வரானார் எம்.ஜி.ஆர். ஆனால் திரைப்படங்களில் நடிக்கும் காலம் முதலே அவர் பெரிதாக மதிக்கும் நபர்களை தனது இல்லத்திற்கு அழைத்து உணவு வழங்கி வந்தார் எம்.ஜி.ஆர்.
அந்த சமயத்தில் அவரும் பெரிதும் மதிக்கும் தலைவரான காமராஜரையும் ஒருமுறை உணவருந்த அழைத்தார். ஆனால் காமராஜர் செல்லவில்லை. அதன் பிறகு பலமுறை அவரை எம்.ஜி.ஆர் அழைத்தும் அவர் உணவு உண்பதற்கு செல்லவே இல்லை. இந்த நிலையில் ஒருமுறை ஒரு விழாவிற்கு சென்றிருந்தார் எம்.ஜி.ஆர்.
அந்த விழாவில் கீழ் இருக்கையில் காமராஜர் அமர்ந்திருந்தார். அவரை பார்த்த எம்.ஜி.ஆர் அவரை அழைத்து எத்தனை முறை நான் அழைத்தும் ஏன் எனது வீட்டிற்கு உணவு உண்பதற்கு வரவில்லை என அவரிடம் கேட்டார் எம்.ஜி.ஆர்.
அதற்கு பதிலளித்த காமராஜர், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஏழை விவசாயின் பட்டினியை போக்க முடியவில்லை. இன்னமும் ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்படும் குழந்தைகள் இங்கு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் எப்போது நல்ல உணவு கிடைக்கிறதோ அன்றுதான் நல்ல உணவு உண்ண வேண்டும் என சபதம் எடுத்துள்ளேன்.
உன் வீட்டிற்கு வந்தால் அறுசுவை உணவு வைப்பாய். ஆனால் அதை என்னால் சாப்பிட முடியாது என கூறியுள்ளார் காமராஜர். அதே போல இறுதி வரை எம்.ஜி.ஆர் வீட்டிற்கு வந்து காமராஜர் உணவு உண்ணவே இல்லை.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்