Connect with us

உதயநிதி செல்வாக்கால் கங்குவா படத்திற்கு கிடைத்த சலுகை.. விஜய்யை மட்டும் வச்சு செய்ய வேண்டியது? கடுப்பான ரசிகர்கள்.!

udhayanidhi kanguva

Tamil Cinema News

உதயநிதி செல்வாக்கால் கங்குவா படத்திற்கு கிடைத்த சலுகை.. விஜய்யை மட்டும் வச்சு செய்ய வேண்டியது? கடுப்பான ரசிகர்கள்.!

kanguwa is a big budget movie starring actor Surya. This movie is getting a lot of response. This movie is going to hit the theaters tomorrow

நடிகர் சூர்யா நடிப்பில் பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. பெரும்பாலும் சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருப்பது உண்டு. ஏனெனில் சூர்யா எப்போதுமே புதுப்புது கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.

ஒரு பக்கம் சண்டை காட்சிகள் கொண்ட கமர்சியல் திரைப்படங்களில் நடித்த அளவு கூட மற்றொரு பக்கம் மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்தும் அவர் நடித்து வருகிறார். அவர் நடித்த 24 மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அந்த மாதிரி தேர்ந்தெடுக்கப்பட்டதுதான்.

எதிர்பார்ப்பை தூண்டும் கங்குவா திரைப்படம்:

இந்த நிலையில் தற்சமயம் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் இது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த படத்தின் கதை அம்சமே பலருக்கும் பிடித்த வகையில் அமைந்து இருக்கிறது. 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியின மக்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு கங்குவா திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த படத்தை பேன் இந்தியா அளவில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கின்றனர். அதனை தொடர்ந்து சூர்யா மற்றும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் பல இடங்களுக்கு சென்று படத்தை குறித்து விளம்பரத்தை செய்து வருகின்றனர்.

சிறப்பு காட்சிகள்:

தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சூர்யாவிற்கு ரசிகர்கள் அதிகம். அதனால் அங்கும் சென்று சூர்யா நேரடியாகவே தனது திரைப்படத்தை பிரமோஷன் செய்து வருகிறார். ஏனெனில் சூர்யாவும் இந்த திரைப்படத்தை அதிகமாக நம்பி இருக்கிறார்.

இவருக்கு கண்டிப்பாக இந்த திரைப்படம் கைகொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் பொதுவாக பெரிய பெரிய திரைப்படங்களை ஸ்பெஷல் ஷோ முறையில் அதிகாலை காட்சிகள் மூலமாக திரையிடப்படும்.

ஆனால் எல்லா திரைப்படங்களும் அதற்கு அனுமதி கிடைப்பது கிடையாது ஆனால் கங்குவா திரைப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு நிறைய விஜய் திரைப்படங்களுக்கு இந்த மாதிரியான சிறப்பு காட்சிகள் மறுக்கப்பட்டு இருக்கின்றன.

அப்படி இருக்கும் பொழுது கங்குவா திரைப்படத்திற்கு எப்படி அனுமதி கிடைத்தது என்று பார்க்கும் பொழுது உதயநிதி ஸ்டாலின் தான் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறார். அதனால்தான் இந்த படத்திற்கு அனுமதி கிடைத்திருக்கிறது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. அதே சமயம் விஜய் மீது இருக்கும் கோபத்தின் காரணமாக தான் அவரது திரைப்படத்திற்கு மட்டும் அனுமதி வழங்க மறுக்கிறார்கள் என்றும் ஒரு பக்கம் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
To Top