Tamil Cinema News
வளர்ந்ததும் என்னை மறந்துட்டான்.. பிரதீப் ரங்கநாதனால் துயரப்பட்ட டெல்லி கணேஷ்.. இந்த விஷயம் தெரியாம போச்சே?.
Actor Delhi Ganesh is one of the famous actors in Tamil. Most of Delhi Ganesh’s films and his comedies are well received. In an earlier interview, he said about director Pradeep Ranganathan.
கோமாளி என்கிற திரைப்படம் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதற்கு பிறகு அவர் இரண்டாவதாக இயக்கிய லவ் டுடே திரைப்படத்தில் அவரே கதாநாயகனாக நடித்தார்.
4 கோடிக்கு எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் 15 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு இயக்குனராகப் படங்கள் கிடைப்பதை விட நடிகராக நடிப்பதற்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.
இந்த நிலையில் தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் லவ் டுடே திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன்தான் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே லவ் டுடே திரைப்படத்தை குறும்படமாக எடுத்திருந்தார்.
உதவி செய்ய மறுத்த பிரதீப்:
அதை குறும்படமாக அவர் எடுக்கும் பொழுது சத்யராஜ் கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை எடுக்கும்பொழுது டெல்லி கணேசுக்கு சம்பளம் என்று எதுவுமே அவரால் கொடுக்க முடியவில்லை.
எனவே பிரதீப் ரங்கநாதன் டெல்லி கணேஷ் நடிக்கும் பொழுதே அவரிடம் கூறியிருக்கிறார், இந்த படத்திற்கு உங்களுக்கு பெரிதாக சம்பளம் என்று எதுவும் எங்களால் கொடுக்க முடியாது என்று… அதனை கேட்ட டெல்லி கணேஷ் பரவாயில்லை இளம் இயக்குனர்கள் வளர்ந்து வருவதற்கு என்னுடைய உதவியும் ஒரு பக்கம் இருக்கட்டும் என்று கூறி நடித்துக் கொடுத்திருக்கிறார்.
ஆனால் அதையே திரும்ப பெரிய பாடமாக எடுக்கும் பொழுது அந்த கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷை நடிக்க வைக்காமல் சத்யராஜை நடிக்க வைத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். பிறகு டெல்லி கணேஷ் ஒரு பேட்டியில் பேசும்பொழுது சின்ன இயக்குனர்களாக இருக்கும் பொழுது நம்மிடம் உதவி கேட்டு வருகிறார்கள். வளர்ந்த பிறகு நம்மை மறந்து விடுகிறார்கள் என்று பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசி இருந்தார். அது இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.