News
எனக்கு பாட்டு எழுத தெரியாதா! – சுஜாதாவை அசரவைத்த கண்ணதாசன்!
தமிழ் திரை உலகில் கவிஞர்களில் ஒரு ஜாம்பவான் என்றால் அது கவிஞர் கண்ணதாசன் தான். கவிஞர் கண்ணதாசன் எழுதிய பல பாடல்கள் அவருடைய காலகட்டங்களில் பெரும் ஹிட் கொடுத்த பாடல்கள்.

அதே சமயம் அந்த காலகட்டத்தில் அதிகமாக சர்ச்சைக்கு உள்ளான ஒரு நபரும் கவிஞர் கண்ணதாசன்தான். ஏனெனில் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசக்கூடிய ஒரு நபராக கண்ணதாசன் இருந்தார். இதனாலேயே பலருக்கும் அவரை பிடிக்காமல் இருந்தது.
கமல், ரஜினி நடித்து பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான திரைப்படம் நினைத்தாலே இனிக்கும். இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.
அந்த சமயத்தில்தான் எழுத்தாளர் சுஜாதா தமிழ் சினிமாவில் திரைக்கதைகளை எழுதுவதற்காக வந்திருந்தார். அவருக்கு கண்ணதாசனைப் பற்றி நல்லவிதமான அபிப்பிராயம் எதுவும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் எம்.எஸ்.வி, எஸ்.பி பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா மூவரும் சேர்ந்து படத்திற்கான ஒரு பாடலுக்கான பாடல் வரியை எழுதுவதற்காக கண்ணதாசனை பார்க்க சென்றிருந்தனர்.
ஊர் ஊராகச் சென்று மேடையில் பாடக்கூடிய ஒரு குழுவினர் தான் படத்தில் கதாநாயகர்களாக இருந்தனர். எனவே அவர்களுக்கு தகுந்தாற் போல பாடல் வரிகளை எழுத வேண்டும் என கண்ணதாசனிடம் கூறப்பட்டது.
எனவே கண்ணதாசன் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் என்கிற பாடலை எழுதினார். ஊர் ஊராக பல இடங்களுக்குச் சென்று பாடல் பாடுகிறார்கள் என்பதை குறிக்கும் விதமாக இந்த வரிகள் இருந்தது. அப்படியே படத்திற்கு தகுந்தாற் போல அனைத்து வரிகளையும் எழுதி முடித்தார் கண்ணதாசன்.
அதைப் பார்த்த பிறகு சுஜாதாவிற்கு கண்ணதாசன் உண்மையில் எவ்வளவு பெரிய கவிஞர் என்பது புரிந்தது. அதன் பிறகுதான் கண்ணதாசன் மீது சுஜாதாவிற்கு ஒரு மரியாதையே வந்தது. பிறகு எப்போது கண்ணதாசனை காண சென்றாலும் சுஜாதா மிகவும் மரியாதையுடன்தான் செல்வாராம்.
