Connect with us

ரத்தத்திற்கு நடுவே பிறக்கும் கடவுள்!.. இந்திய சினிமாவிலேயே இது புதுசு… காந்தாரா 2 வெறித்தனமான டீசர்!..

kanthara 2

Latest News

ரத்தத்திற்கு நடுவே பிறக்கும் கடவுள்!.. இந்திய சினிமாவிலேயே இது புதுசு… காந்தாரா 2 வெறித்தனமான டீசர்!..

cinepettai.com cinepettai.com

வட இந்தியாவை பொறுத்தவரை அங்கு பெரு தெய்வ வழிபாடுதான் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது. ஆனால் தென்னிந்தியாவை பொறுத்த வரை இங்கு சிறு தெய்வ வழிபாடு மக்களோடு மிகவும் ஒன்றிணைந்த ஒரு வழிபாடு எனக் கூறலாம்.

மதங்கள் எல்லாம் உருவாவதற்கு முன்பிருந்தே மக்கள் தங்கள் பகுதியில் வாழ்ந்த ஒரு பெண்ணையோ ஆணையோ அல்லது அவர்களின் தலைவனையோ கடவுளாக வணங்கி வந்தனர். இப்படியாக வணங்கிய கடவுள் பிற்காலத்தில் வீரனார், அய்யனார், பேச்சாயி, காளி அம்மன், மாரியம்மன் என்கிற பெயரில் குல தெய்வமாக மாறின.

அம்மன், சிவன், முருகன் மாதிரியான பல வட்டார தெய்வங்களை மதங்கள் இழுத்துக் கொண்ட போதும் இன்றும் மக்கள் தங்களது கலாச்சாரம் மாறாமல் சில தெய்வங்களை வணங்கி வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே திரைப்படத்தை பொருத்தவரையிலும் கூட வட்டார தெய்வம் சார்ந்து வருகிற படங்கள் மக்களிடம் அதிக வரவேற்பு பெறுகின்றன.

இந்த நிலையில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள மலைவாழ் மக்களின் வட்டார தெய்வமான பஞ்சூரளி என்கிற தெய்வத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் காந்தாரா. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் அதிக வரவேற்பை பெற்றதை அடுத்து அந்த திரைப்படம் தமிழில் கூட டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அந்த படம் கொடுத்த வசூலை பார்த்த ஹம்பாலே தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தின் அடுத்த பாகத்தை எடுக்குமாறு இயக்குனர் ரிஷப் செட்டியை வலியுறுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து காந்தாராவின் இரண்டாம் பாகத்தை எடுக்க துவங்கியுள்ளார் ரிஷப் ஷெட்டி. அதற்காக அவர் வெளியிட்டிருக்கும் டீசரில் அந்த தெய்வமாக ரிஷப் ஷெட்டியே உருவெடுத்து இருப்பதை பார்க்க முடிகிறது.

பொதுவாக வட்டார தெய்வங்கள் ஆக்ரோஷமான தெய்வங்களாகத்தான் இருக்கும். அதனை வெளிப்படுத்தும் முறையில் உடல் முழுவதும் ரத்தத்துடன் கூடிய ஒரு தெய்வமாக இருப்பதை காட்டியுள்ளனர். அதேபோல சூலம் என்பது வட்டார தெய்வங்களின் அடையாளமாகும். அதையும் சரியாக அவரின் கையில் பொறுத்தி இருக்கின்றனர். பஞ்சுருளி என்னும் தெய்வம் ஒரு காட்டு பன்றியாகும். காட்டு பன்றிக்கு யானை போலவே இரு பற்கள் நீட்டி கொண்டிருக்கும் அதையும் கூட தற்சமயம் அந்த கதாபாத்திரத்திற்கு வைத்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

எனவே இந்த திரைப்படம் முதல் பாகத்தை விடவும் அதிக வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டீசரில் தெய்வம் ஆங்கிலத்தில் பேசியதுதான் மக்களுக்கு இருக்கும் ஒரே அதிருப்தி. இந்த டீசரே தற்சமயம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்தியாவிலேயே வட்டார தெய்வத்திற்கு இவ்வளவு பொருட் செலவில் வரும் முதல் திரைப்படம் இதுதான் என கூறப்படுகிறது.

காந்தாரா சாப்டர் 1 டீசரை காண இங்கு க்ளிக் செய்யவும்.

To Top