சித்தார்த்தை வேண்டாம் என கூறிய கார்த்திக் சுப்புராஜ்!.. ரிஸ்க் எடுத்த தயாரிப்பாளர்!.. எந்த படம் தெரியுமா?..
தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கிய பேட்ட, ஜிகர்தண்டா போன்ற திரைப்படங்கள் இங்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளன.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படம் எடுத்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த சமயங்களில் தயாரிப்பாளர் சிவி குமார் குறைந்த பட்ஜெட்டை கொண்ட நல்ல திரைப்படங்களை தயாரித்து வந்தார்.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் முதலில் ஜிகர்தண்டா படத்தின் கதையைதான் சிவி குமாரிடம் கொடுத்தார். ஆனால் அதை படித்த சிவி குமார் இந்த கதை பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகும். இன்னும் கொஞ்சம் குறைந்த பட்ஜெட்டில் படம் பண்ணுவதற்கு கதை கொண்டு வா என கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதைதான் பீட்சா. இந்த படத்தின் கதையை அப்போது தயாரிப்பாளர் ஞானவேல் கேட்டார். கேட்டுவிட்டு இந்த படத்தில் சித்தார்த்தை நடிக்க வைப்பதாக இருந்தால் நானே இதை தயாரிக்கிறேன் என கூறினார்.
ஆனால் கார்த்திக் சுப்புராஜ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி அதில் நடித்தார். ஆனால் அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் சித்தார்த்தை வைத்து ஜிகர்தண்டா திரைப்படத்தை இயக்கினார்.