Actress
சட்டையை முழுசா திறந்து.. காவ்யா அறிவுமணியின் அசத்தல் லுக்
kaviya arivumani: தற்பொழுது சினிமாவில் வெள்ளித்திரையில் இருக்கும் நடிகர். நடிகைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் மக்கள் மனதில் சுலபமாக இடம் பிடித்து விடுகிறார்கள். காரணம் அவர்கள் நடிக்கும் சீரியலில் அவர்களுக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை அவ்வளவு தத்துரூபமாக நடித்து அவர்களின் நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விடுகிறார்கள். மேலும் சொல்லப்போனால் அவ்வாறு சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தங்கள் வீட்டு பிள்ளைகளாக கொண்டாடுகிறார்கள்.
தற்பொழுது சின்னத்திரை, வெள்ளித்திரைக்கு இணையாக பல சுவாரசிய கதைகளைக் கொண்டு, விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு இருக்கையில் சீரியலில் நடிக்கும் ஒரு சில கதாபாத்திரங்களை மக்கள் எளிதாக மறப்பதில்லை. மேலும் அதில் நடிக்கும் சில நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் தானாக உருவாகிவிடும். இதனால் அவர்களுக்கு சின்னத்திரையில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து வெள்ளித்திரையிலும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கிறது.
அந்த வகையில் தமிழ் சீரியல்களில் நடித்தவர் காவியா அறிவுமணி. அவர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது.
காவ்யா அறிவுமணி
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார். இதில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் இவர் நடித்திருப்பார்.
அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு பாண்டியன் ஸ்டோரில் முல்லை கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். மேலும் முல்லையாக நடித்த சித்ராவின் மறைவிற்குப் பிறகு அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெள்ளித்திரையில் இவர் நடிகர் பரத் நடிப்பில் வெளியான மிரள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அதன் பிறகு ரிப்புபரி,வாத்தி போன்ற படங்களில் நடிப்பதற்கு காவ்யா அறிவுமணிக்கு வாய்ப்பு கிடைத்தது.
மேலும் வெள்ளித்திரையில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களும், அதில் அவர் அழகாக கொடுத்திருக்கும் போஸ்களும் தான் இவரை வெள்ளித்திரை வரை கொண்டு சென்று இருக்கிறது என அவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் தற்பொழுது உள்ள ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் காவ்யா அறிவுமணி பதிவிட்டு வருவதால் இவருக்கு அதிக அளவில் பட வாய்ப்புகள் வருவதாக பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் காவ்யா அறிவுமணி
தற்பொழுது வெள்ளித்திரையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் காவியா அறிவுமணி, சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருப்பவர். புதிய புதிய புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

சீரியலில் குடும்ப பெண்ணாக பார்த்த அறிவுமணியை தற்பொழுது பலரும் மாடனாகவும், ஸ்டைலாகவும் பார்த்து வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பலரும் சீரியலில் நடித்த காவ்யா அறிவுமணியா என கருத்துக்கள் பதிவிட்டு வருவதோடு அவரின் புகைப்படங்களை ஷேர் செய்தும் கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.

அதேபோன்று தற்பொழுது அவர் பகிர்ந்து இருக்கும் புகைப்படத்தில் பார்ப்பதற்கு மாடனாகவும், ஸ்டைலாகவும் உள்ளார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பஅவர்களின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
