நடிக்க வைக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!.. சிவாஜி படத்தின் வெற்றி விழாவை தவிர்த்த பிரபலம்!.. இதல்லாம் தவறில்லையா!..

Sivaji movies: தமிழ் சினிமாவில் இப்போது போல அல்லாமல் முன்பெல்லாம் திரைக்கதை எழுதுவதற்கு தனியாக எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்களது திரைக்கதைக்கும் அதிக வரவேற்பு இருந்தது. உதாரணமாக கலைஞர் மு கருணாநிதி எழுதும் கதைகள் அப்போது வரவேற்பை பெற்றவை.

அந்த வகையில் ஜெயகாந்தன், சுஜாதா மாதிரியான எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் பணிப்புரிந்திருக்கின்றனர். அப்படி சிவாஜி எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் பணிபுரிந்தவர்களில் முக்கியமானவர் கொத்தமங்கலம் சுப்பு.

திரைப்படங்கள் இயக்குதல் வசனங்கள் எழுதுதல் என்று பல பணிகளை தமிழ் திரையுலகில் செய்து வந்தார். அப்பொழுது ஆனந்த விகடனின் உரிமையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான எஸ் எஸ் வாசனுடன் இவருக்கு ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக ஆனந்த விகடன் பத்திரிகையிலும் அவர் எழுத துவங்கினார்.

Social Media Bar

அந்த சமயத்தில் தஞ்சாவூர் தொடர்பான ஒரு கதையை அவர் எழுதினால் நன்றாக இருக்கும் என்று எஸ் எஸ் வாசன் கேட்டதற்கு இணங்க தில்லானா மோகனாம்பாள் என்னும் தொடரை வார தொடராக எழுத தொடங்கினார் கொத்தமங்கலம் சுப்பு.

வாசகர்கள் மத்தியில் அந்த தொடருக்கு அதிகமான வரவேற்பு ஏற்படவே அதை திரைப்படம் ஆக்குவதற்கான பேச்சுக்கள் சென்று கொண்டிருந்தன. எஸ்.எஸ் வாசனே அந்த படத்தை தயாரிக்கலாம் என்று இருந்தார். ஆனால் வேலைபளுவால் படத்தை இயக்க வேறு ஆளை தேடி கொண்டிருந்தார். எனவே அதற்கான இயக்குனரை தேடும் பொழுது அந்த திரைப்படம் கைமாறிப் போய்விட்டது. ஏ.பி நாகராஜன் அந்த திரைப்படத்தை இயக்கி தயாரிக்க தயாராக இருந்தார்.

இருந்தாலும் அது படமாக வந்தால் போதும் என்று எஸ் எஸ் வாசனை விட்டு விட்டார். இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் நாகேஷ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டிருந்தார் கொத்தமங்கலம் சுப்பு. அவர் கதையை எழுதும் பொழுதே அந்த கதாபாத்திரத்தில் அவர்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்.

ஆனால் திரைப்படம் கைமாறிப் போனதால் எஸ் எஸ் வாசனால் கொத்த மங்கலம் சுப்புவை அந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை இதனால் கோபம் அடைந்த கொத்தமங்கலம் சுப்பு அந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை.