பனியில் படமெடுக்க மலைக்கு போய் விஜய்யை தொழைச்சிட்டோம்… உண்மையை வெளியிட்ட கேமராமேன்!..

Actor Vijay: தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

அதனால் விஜய்யின் சம்பளமும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. லியோ திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்ததை அடுத்து விஜய் அடுத்து நடித்து வரும் திரைப்படம் கோட்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதால் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் விஜய் மிக அரிதாகவே இரட்டை வேடங்களில் திரைப்படங்களில் நடிப்பார்.

Thalapathy-vijay
Thalapathy-vijay
Social Media Bar

அவரது சினிமா வாழ்க்கையில் பார்த்தோம் என்றால் பெரிதாக இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்களே கிடையாது. அழகிய தமிழ் மகன் திரைப்படத்திலும் ஒரு கதாநாயகன் ஒரு வில்லன் என்றுதான் நடித்திருப்பார்.

இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களுமே கதாநாயகனாக நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவரிடம் நடந்த சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றை அவருடன் பணிபுரிந்த கேமரா மேன் ஒருவர் பகிர்ந்திருக்கிறார்.

படத்தில் நடந்த சம்பவம்:

மின்சார கண்ணா திரைப்படம் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கே.எஸ் ரவிகுமார் எடுக்கும் பொழுது அதில் பனிமலையில் விஜய்யை வைத்து ஒரு காட்சி எடுப்பதற்கு திட்டமிட்டிருந்தனர்.

அதற்காக விஜய்யை பனிமலைக்கு அழைத்துச் சென்று ட்ரோன் கேமரா மூலமாக படத்தை எடுக்க திட்டமிட்டனர். ஆனால் அப்பொழுது ட்ரோன் கேமராவின் விலை அதிகமாக இருந்ததால் வாடகைக்கு ஒரு ஹெலிகாப்டரை எடுத்துக் கொண்டு கேமரா மூலம் விஜய்யை அப்படியே சுற்றி வரலாம் என்று பிளான் செய்தனர்.

ஆனால் ஹெலிகாப்டரில் பறக்க துவங்கிய பிறகு விஜய் அவ்வளவு சரியாக கேமராவில் தெரியவில்லை கேமரா மேன் குத்துமதிப்பாக அந்த காட்சியை படம் பிடித்திருக்கிறார். காட்சி நன்றாக வந்ததா என கே.எஸ் ரவிக்குமார் கேட்கும் பொழுது இல்லை சார் எனக்கே விஜய் சரியாக தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் கேமிரா மேன்.

அதன் பிறகு எடிட்டிங் செய்து பார்க்கும் பொழுது நல்லபடியாகவே அந்த காட்சி அமைந்திருந்தது இதனை அந்த கேமரா மேன் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.