Connect with us

ரஜினிக்கு போட்ட பாட்டு! பிடிக்கலைனு மணி சார்ட்ட கொடுத்துட்டேன்! – நல்ல பாட்டை தவறவிட்ட ரஜினி பட இயக்குனர்!

Cinema History

ரஜினிக்கு போட்ட பாட்டு! பிடிக்கலைனு மணி சார்ட்ட கொடுத்துட்டேன்! – நல்ல பாட்டை தவறவிட்ட ரஜினி பட இயக்குனர்!

Social Media Bar

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல பாடல்களை இயக்குனர்கள் தவறால் இழக்கும் சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. ஒவ்வொரு படத்திற்கும் படத்திற்கான மொத்த இசையை இசையமைப்பாளர்கள்தான் இசைப்பார்கள். அப்போது அவர்களுக்கு பிடித்த மாதிரி சில இசைகளையும் அதில் அவர்கள் சேர்ப்பார்கள்.

ஆனால் இயக்குனர்களுக்கு அது பிடிக்கவில்லை எனில் அதை இசையமைப்பாளர்கள் மாற்ற வேண்டி இருக்கும். அந்த மாதிரி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கும் கூட ஒரு சம்பவம் நடந்தது. 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து லிங்கா படம் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் காதல் காட்சிகளுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும்போது அவருக்கு பிடித்த வகையிலான பாடல் ஒன்றை இசையமைத்திருந்தார். ரஜினியின் ப்ளாஷ்பாக் கதையில் இந்த இசை பயன்படுத்த இருந்தது.

ஆனால் இந்த இசை கே.எஸ் ரவிக்குமாருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இதற்கு மாற்றாக வேறு எதேனும் இசையை போட்டு தாருங்கள் என வேறு இசையை வாங்கி சென்றார். அதற்கு பிறகு மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கான வாய்ப்பு ஏ.ஆர் ரகுமானுக்கு வந்தது.

இந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட ஏ.ஆர் ரகுமான் அவரிடம் இந்த இசையை போட்டுக்காட்டியுள்ளார். அந்த இசை கேட்ட உடனே மணிரத்னத்திற்கு பிடித்துவிட்டது. உடனே அந்த படத்தில் அது சின்னஞ்சிறு ரகசியமே என்னும் பாடலாக அதை மாற்றி அமைத்தனர். ஓ.கே கண்மணி படம் வெளியான பிறகு அந்த இசை மிகவும் பிரபலமானது.

To Top