Tamil Cinema News
ஓ.டி.டியில் சாதனை படைத்த குடும்பஸ்தன்..! போகும் இடம் எல்லாம் வெற்றிதான்…
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படம்தான் குடும்பஸ்தன். குடும்பஸ்தன் திரைப்படத்தை பொருத்தவரையில் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்.
ஆனாலும் கூட அந்த திரைப்படத்தின் கதைகளம் மிடில் கிளாஸ் ஆண்களின் மனநிலைக்கு நெருக்கமான ஒரு கதைக்களமாக இருந்தது. பெரும்பாலும் சினிமாவில் வெளிவரும் கதைகள் எல்லாமே நிஜ வாழ்க்கைக்கு நெருக்கம் இல்லாததாக இருக்கும்.
ஆனால் குடும்பஸ்தன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களே நிஜ வாழ்க்கையோடு ஒன்றிய கதைக்களங்களைக் கொண்டிருக்கின்றன. இதனாலேயே குடும்பஸ்தன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் கூட நல்ல வசூலை பெற்று கொடுத்தது குடும்பஸ்தன் திரைப்படம் அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் ஜீ 5 ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
ஜி 5 ஓடிடியில் வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த திரைப்படம் ட்ரெண்டிங் லிஸ்டில் வந்திருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு இந்த அளவிற்கு ஓடிடிக்கு இருக்கும் வரவேற்பு கிடைத்திருப்பது தற்சமயம் அந்த பட குழுவிற்கு அதிக மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
