Connect with us

இதுதான் லியோ படத்தோட கதை!. சூசகமாக கூறிய லோகேஷ் கனகராஜ்!.

vijay leo

News

இதுதான் லியோ படத்தோட கதை!. சூசகமாக கூறிய லோகேஷ் கனகராஜ்!.

Social Media Bar

லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்திலேயே மக்கள் மனதில் அதிகமான வரவேற்பை ஏற்படுத்தக்கூடிய திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு துவங்கிய காலம் முதலே இந்த படத்திற்கான வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது.

முக்கியமாக தளபதி ரசிகர்கள் இந்த படத்திற்காக வெகுவாக காத்திருக்கின்றனர். நிச்சயமாக இந்த படம் வாரிசு மற்றும் பீஸ்ட் திரைப்படத்தை விட சிறப்பான திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

மேலும் இந்த திரைப்படம் இதுவரை இந்த விஜய் திரைப்படத்தின் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் கதை குறித்து லோகேஷ் கனகராஜ் மாஸான ஒரு அப்டேட் கொடுத்திருந்தார். அவரிடம் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று ஒரு பேட்டியில் கேட்கும் பொழுது அவர் அதற்கு ஒரு கதை கூறினார்.

அதாவது ஒரு சிங்கம் காட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு கண்காட்சியில் வைக்கப்படுகிறது. அதற்கு மூன்று வேலை உணவு தரப்படுகிறது. பிறகு மீண்டும் அதை கொண்டு வந்து காட்டிலேயே விடுகின்றனர். இப்பொழுது அந்த சிங்கம் கண்காட்சியில் வாழ்ந்த வாழ்க்கைக்கு பழகிவிட்டது.

எனவே அது வேட்டையாடுவதை நிறுத்திவிட்டது. சாப்பிடுவதற்கு வேளா வேளைக்கு உணவு கிடைத்து பழகியதால் அதனால் இந்த காட்டு வாழ்க்கையை வாழ முடியவில்லை. எனவே அப்படியே பட்டினி இருந்து இறந்துவிடலாம் என முடிவு செய்கிறது அந்த சிங்கம்.

அப்பொழுது காட்டில் இருக்கும் நரிகளும் மற்ற விலங்குகளும் அந்த சிங்கத்தை கொல்ல நினைக்கிறது. இந்த நிலையில் சிங்கத்திற்கு ஒரு மனநிலை வருகிறது நான் உணவுக்காக வேட்டையாட கூடாது என்று முடிவெடுத்தேனே தவிர யாரையும் கொல்லக்கூடாது என்று முடிவெடுக்கவில்லை.

ஒருவேளை என்னை எந்த மிருகமாவது கொல்ல நினைத்தால் அதற்கான பதிலடி வேறு விதமாக இருக்கும் என்பது அந்த சிங்கத்தின் மனநிலையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதைதான் இந்த லியோ திரைப்படமும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட லியோ என்பதற்கு சிங்கம் என்று பொருள் என்பதால் விஜய் தான் அந்த சிங்கம் கதாபாத்திரம் என்று எளிதாகவே தெரிகிறது. ரவுடியாக இருக்கும் விஜய் மனம் திருந்தி குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவரது பழைய பகைவர்கள் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு அவரை கொல்ல நினைக்கிறார்கள். ஆனால் சிங்கம் எப்போதுமே சிங்கம்தானே.. எனவே மீண்டும் அண்ணன் நான் இறங்கி வரவா என சம்பவத்திற்குள் இறங்குகிறார் விஜய். இப்படிதான் கதை இருக்கும் என அணுமானிக்கப்படுகிறது.

To Top