Connect with us

தியேட்டர்காரங்க பண்றதை பார்க்கும்போதுதான் பயமா இருக்கு!.. இறுதிக்கட்ட பயத்தில் லோகேஷ் கனகராஜ்..

lokesh kanagaraj theatre

Tamil Cinema News

தியேட்டர்காரங்க பண்றதை பார்க்கும்போதுதான் பயமா இருக்கு!.. இறுதிக்கட்ட பயத்தில் லோகேஷ் கனகராஜ்..

Social Media Bar

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் லியோ. லியோ திரைப்படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்சமயம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன.

இந்த நிலையில் படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக பல யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முன்பெல்லாம் படத்தை ப்ரோமோஷன் செய்ய கதாநாயகர்கள்தான் பேட்டி கொடுப்பார்கள். ஆனால் இப்போது கதாநாயகர்கள் தரம் உயர்ந்ததால் இயக்குனர்கள் பேட்டி அளிக்க வேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது.

பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசும்போது இந்தியாவில் பல வித தொழில்நுட்பத்தில் திரையரங்குகள் உள்ளன. அவை அனைத்திற்கும் ஏற்றாற் போல திரைப்படத்தின் தரம் மாறுப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி திரையரங்குகளே பல ஊழல்களை செய்கின்றன.

நான் எனது முதல் படமான மாநகரம் திரைப்படத்திற்கு திரையரங்கிற்கு சென்றப்போது அங்கு படத்தின் சவுண்ட் முற்றிலுமாக மாறி இருந்தது. என்ன இப்படி உள்ளதே என திரையரங்கு உரிமையாளரிடம் கேட்ட பொழுது அவர் சவுண்டை குறைத்து வைத்துள்ளோம் என கூறினார்.

எனவே திரையரங்குகள் மக்களுக்கு நல்ல தரத்தில் படத்தை கொடுக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்யாத பட்சத்தில் நல்ல படங்கள் கூட மக்களுக்கு பிடிக்காமல் போய்விடும் என கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

To Top