Connect with us

பெண்களுக்கு எதிரான படம் லவ் டுடே? – இயக்குனருக்கு எதிராக வழுக்கும் கருத்துக்கள்

News

பெண்களுக்கு எதிரான படம் லவ் டுடே? – இயக்குனருக்கு எதிராக வழுக்கும் கருத்துக்கள்

Social Media Bar

தமிழ் சினிமாவில் தற்சமயம் வந்த திரைப்படங்களில் வெறும் 5 கோடிக்கு எடுத்து 50 கோடி ரூபாய்க்கு ஹிட் அடித்த திரைப்படம் லவ் டுடே.

படத்தில் காதலர்கள் இருவரும் அவர்களது மொபைலை மாற்றிக்கொள்ள அதனால் நடக்கும் பிரச்சனையை வைத்து கதை செல்கிறது. ஆரம்பத்தில் பலரும் படத்தை புகழ்ந்து வந்தாலும் பல பெண்ணிய அமைப்புகள் படம் குறித்து குற்றச்சாட்டுக்களை பேசி வந்தனர்.

படத்தின் கதையில் கதாநாயகன் பெண்களிடம் குறும்படம் எடுக்க போவதாக ஏமாற்றி அவர்களிடம் ஆபாச புகைப்படங்களை வாங்குவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதே போல அவனின் நண்பர்களும் கூட பெண்களிடம் புகைப்படங்களை ஏமாற்றி பெறுவது, காசு பெறுவது, தவறான கமெண்டுகளை இடுவது போன்றவற்றை செய்கின்றனர். அப்போதெல்லாம் அந்த காட்சி நகைச்சுவையாக நகர்கிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் அதே விஷயங்களை ஒருவன் கதாநாயகிக்கும் செய்கிறான். அப்போது மட்டும் அது தவறாக காட்டப்படுகிறது. ஆக கதாநாயகன் மற்ற பெண்களுக்கு செய்யும்போது அது தவறாக இல்லை. அதுவே தனது காதலிக்கு நடக்கும்போது தவறாக இருக்கிறது.

அப்படி பார்க்கையில் கதாநாயகனும் கூட ஒரு மோசமான கதாபாத்திரம்தானே? என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். மேலும் வருங்கால தலைமுறையினருக்கு “இப்படி பெண்களிடம் ஆபாச படங்கள் கேட்பது, பொய்யான அக்கவுண்ட் மூலம் அவர்களிடம் பேசுவது” எல்லாம் சரி என இயக்குனர் பயிற்றுவிக்கிறாரா? என்றும் விவாதங்கள் வருகின்றன.

இந்நிலையில் ஆர்.ஜே ஆனந்தி, எழுத்தாளர் லதா, மற்றும் ஒரு உளவியல் நிபுணர்கள் இணைந்து படத்தில் பேசப்பட்டுள்ள அபத்தமான விஷயங்கள் குறித்து விவாதம் செய்துள்ளனர்.

அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

To Top