Connect with us

இந்தியன் 2 வை நட்டாத்தில் விட்ட கமல் ஷங்கர்… பரிதவிப்பில் லைக்கா..! ரிலீஸ் நேரத்துல கூடவா?

kamal indian 2

News

இந்தியன் 2 வை நட்டாத்தில் விட்ட கமல் ஷங்கர்… பரிதவிப்பில் லைக்கா..! ரிலீஸ் நேரத்துல கூடவா?

Social Media Bar

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் இந்தியன். இந்த படத்தின் கிளைமாக்ஸில் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் தப்பித்து செல்வதாக கதை முடிந்திருக்கும். அதனை ஒரு கனெக்டாக கொண்டு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் ஷங்கர்.

கமல்ஹாசன் சேனாபதி என்கிற அந்த கதாபாத்திரத்திற்கு அப்பொழுதே அதிக வரவேற்பு இருந்த காரணத்தினால் இந்தியன் 2 திரைப்படத்திற்கு தானாகவே ஒரு வரவேற்பு உருவாகிவிட்டது.

இந்தியன் 2 வரவேற்பு:

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி விட்டன. அடுத்து இந்த திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்திற்கான விளம்பரத்தை தொடங்கியிருக்கிறது லைக்கா நிறுவனம்.

kamalhaasan
kamalhaasan

ஏற்கனவே அவர்களது தயாரிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படம் பெரும் தோல்வியை கண்டதை அடுத்து இந்தியன் 2 திரைப்படத்தின் வசூலை வைத்து தான் லைக்கா நிறுவனம் அடுத்த திரைப்படங்களை தயாரிப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறது.

இதற்கு நடுவே இந்தியன் படத்தை இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என்று இரண்டு திரைப்படங்களாக எடுத்தனர். இதனால் இரண்டு படத்திற்கான சம்பளம் வேண்டும் என்று இயக்குனர் ஷங்கரும் நடிகர் கமல்ஹாசனும் கேட்டிருந்தனர்.

கமல்ஹாசன் லைக்கா நிறுவனம்:

அந்த சம்பள விஷயத்தில் கமலஹாசனுக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையே ஏதோ பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பளத்தை இழுத்து அடிக்கும் காரணத்தினால் இந்தியன் 2 திரைப்படத்தின் விளம்பரப்படுத்துவதற்கு கமல்ஹாசன் வருகை தரவில்லை.

indian-2
indian-2

மொத்தமாக அவர் நிராகரித்துவிட்டார். அதேபோல இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கி வரும் அதே நேரத்தில் கேம் சேஞ்சர் என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். தற்சமயம் இந்தியன் 2 படத்தின் வேலைகள் முடிந்த காரணத்தினால் அவர் திரைப்படத்தை கவனிக்க சென்று விட்டார்.

இதனால் அவருமே படத்தை விளம்பரப்படுத்துவதற்கு வருவதற்கு தயாராக இல்லை இவர்கள் இருவருமே இல்லாமல் எப்படி படத்தை விளம்பரப்படுத்த முடியும் என்று தலையில் கையை வைத்து அமர்ந்திருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்.

Articles

parle g
madampatty rangaraj
To Top