Tech News
இனி ஆதார் கார்டை கையில் கொண்டு போக தேவையில்லை.. ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய தொழில்நுட்பம்
ஆதார் கார்டு உபயோகத்தை எளிதாக்கும் வகையில் ஒன்றிய அரசு சில விஷயங்களை செய்து வருகிறது. அந்த வகையில் ஆதார் கார்டு பயன்படுத்துவதற்கு எளிமையான செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு.
எம்.ஆதார் என்கிற இந்த செயலியின் மூலம் எந்த ஒரு இடத்திலும் ஆதார் கார்டு கேட்கிறார்கள் என்றால் இந்த செயலியில் ஆதார் கார்டை ஓபன் செய்து காண்பித்தால் போதும் என்று கூறப்படுகிறது.
இந்த செயலி ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது இதை இன்ஸ்டால் செய்து கொண்டு நமது 12 இலக்க ஆதார் எண்ணை அதில் பதிவிட வேண்டும் பிறகு மொபைலுக்கு வரும் ஓடிபி பதிவிட்டு விட்டால் போதும் நமது ஆதார் கார்டு அதில் வந்து விடும் என்று கூறப்படுகிறது.
