Connect with us

மதரா உச்சிஹாவின் முழுக்கதை – நருட்டோ ஷிப்புடன்!.

madara uchiha

Anime

மதரா உச்சிஹாவின் முழுக்கதை – நருட்டோ ஷிப்புடன்!.

Social Media Bar

மொத்த நருட்டோ சீரிஸில் மிக முக்கியமான வில்லனாக அனைவராலும் அறியப்படுபவர்தான் மதரா உச்சிஹா. உச்சிஹா பரம்பரையில் மிக சக்தி வாய்ந்த ஒரு நபராக மதரா உச்சிஹா இருக்கிறார். உச்சிஹா பரம்பரையை பொறுத்தவரை ஷேரிங்கான் சக்தி வந்த பிறகு பெரும்பாலும் அவர்கள் கெட்ட வழியைதான் தேர்ந்தெடுப்பார்கள். அதைதான் மதராவும் செய்வார்.

இந்த்ரா ஒட்சுட்சுகியின் ஆன்மா மதராவின் உடம்பில் குடியிருக்கும். இந்த்ரா ஒட்சுட்கிதான் உச்சிஹா பரம்பரையின் முதல் நபர் ஆவார். அவரின் மூலமாகதான் உச்சிஹா பரம்பரை உருவாகும். சிறு வயதில் தனது தம்பிகளை காக்க வேண்டும் என்பதுதான் மதராவின் பெரும் கனவாக இருக்கிறது.

மதரா ஹசிரமா நட்பு:

இந்த நிலையில்தான் அவன் ஹசிராமா செஞ்சுவை சந்திக்கிறான். உச்சிஹா பரம்பரைக்கும் செஞ்சு பரம்பரைக்கும் இடையேதான் அப்போது சண்டை நடந்து வருகிறது. இதனால் இவர்கள் இருவரின் நட்பில் விரிசல் ஏற்படுகிறது. அதன் பிறகு மதராவின் கடைசி தம்பியையும் ஹசிராமாவின் தம்பியான டோபிராமா செஞ்சு கொன்றுவிடுகிறான்.

இருந்தாலும் ஹசிராமாவின் கனவை நினைவேற்ற மனம் திருந்தி அவனுடன் சேர்ந்து ஹிடன் லீஃப் வில்லேஜை உருவாக்குகிறான் மதரா. ஆனால் அதன் தலைவராக யார் இருப்பது என்கிற கேள்வி வரும்போது பலரும் ஹசிராமாவையே தேர்ந்தெடுக்கின்றனர்.

இதனால் கோபமடையும் மதரா அந்த கிராமத்தை விட்டே செல்கிறான். திரும்ப வரும்போது அபாரமான சக்திகளுடன் வருகிறான். மேலும் அவன் ஹிடன் லீஃப் வில்லேஜை அழிக்க நினைக்கிறான். தனது கிராமத்தை காப்பாற்ற தன் சொந்த நண்பனையே ஹசிராமா கொலை செய்யும் சூழல் ஏற்படுகிறது.

தப்பிக்கும் மதரா:

அந்த சண்டையில் மதரா இறந்துவிட்டதாக ஹசிராமா நினைக்கிறான். ஆனால் மதரா இறக்கவில்லை. அவன் பல காலங்களாக பூமிக்கு அடியில் ஒரு இடத்தை உருவாக்கி அதில் வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில்தான் ஒபிட்டோவை சந்திக்கிறான் மதரா.

மதராவிற்கு ஒரு திட்டம் உள்ளது. அதுதான் சுகி நோ மி. 9 வால்கள் கொண்ட மிருகங்களின் சக்திகளை இணைத்து அதன் மூலமாக நிலவில் ஷேரிங்கானை வரவழைத்து மொத்த உலகையும் மதராவின் கென் ஜுட்ஸுவிற்குள் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவனது திட்டம்.

க்ரேட் நிஞ்சா வார்:

அதற்கு பகடை காயாக ஓபிட்டோ, பெயின் மற்றும் அகாட்சுகி குழுவை பயன்படுத்தி ஒரு வழியாக சுகி நோ மியை உருவாக்குகிறான் மதரா உச்சிஹா. இதற்காக மூன்றாம் க்ரேட் நிஞ்சா வாரை அறிவிக்கிறான் ஓபிட்டோ. அதில் ரி அனிமேஷன் ஆகும் மதரா உச்சிஹா மிக சக்திவாய்ந்தவரான மாறி சுகி நோ மி திட்டத்தை அமல்ப்படுத்துகிறான். ஆனால் அதுவே ப்ளாக் சிட்சுவின் திட்டம் என்பது பிறகுதான் தெரிகிறது.

ப்ளாக் சிட்சு தனது தாய் காகுயாவை உயிர் பெற செய்ய மறைமுகமாக மதராவை பகடை காயாக பயன்படுத்தியிருப்பான். காகுயா உயிர் பெறும் அந்த சமயத்தில் நிஜமாகவே மதரா உச்சிஹா இறந்து போகிறான். ஆனாலும் நருட்டோவில் மிக சக்தி வாய்ந்த வில்லனாக மதராதான் அறியப்படுகிறான்.

To Top