Connect with us

விஜயகாந்தை நல்லவர்னு சொல்றீங்களே.. அவரை விட நல்லவர் ஒருத்தர் இருக்கார்.. ரகசியத்தை கூறிய தயாரிப்பாளர்!..

vijayakanth

Cinema History

விஜயகாந்தை நல்லவர்னு சொல்றீங்களே.. அவரை விட நல்லவர் ஒருத்தர் இருக்கார்.. ரகசியத்தை கூறிய தயாரிப்பாளர்!..

Social Media Bar

தற்சமயம் தமிழ் சினிமாவில் போற்றப்படும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜயகாந்த் இருக்கிறார். கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பல இளைஞர்களில் விஜயகாந்த் ஒருவர்.

விஜயகாந்த் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட ரொம்பவும் எளிமையான ஒரு மனிதர். தன்னுடைய வாழ்நாளில் கடைசி வரை ஸ்டார் ஹோட்டலிலேயே தங்காத ஒரு தமிழ் சினிமா பிரபலம் என்றால் அது விஜயகாந்த் மட்டும்தான்.

அதேபோல அதிக விலை உயர்ந்த ஆடைகளை விஜயகாந்த் அணிய மாட்டார் சாதாரண வேட்டி சட்டைகளை மட்டுமே வாங்கி அணிந்து கொள்வார். மற்ற நடிகர்களை போல பெரும் நிறுவனத்தின் ஆடைகள் மீது ஆசை கொள்ள மாட்டார் விஜயகாந்த்.

விஜயகாந்த்:

இப்படி எளிமையாக வாழ்ந்தவர் என்றாலும் செலவு செய்வதை பொருத்தவரை விஜயகாந்த் மற்றவர்களுக்கு அதிகமாக செலவு செய்யக்கூடியவர். உதாரணத்திற்கு சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே அவரது அலுவலகத்தில் பல நடிகர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் உணவளித்திருக்கிறார் விஜயகாந்த்.

இப்போது வரை அதை நிறைய இயக்குனர்கள் நினைவு கூறுவதை பார்க்க முடிகிறது. இதனாலேயே எப்பொழுது போற்றப்படும் ஒரு நபராக விஜயகாந்த் இருந்து வருகிறார். இந்த நிலையில் இதுகுறித்து பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் தனது பேட்டியில் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் பெரிதும் போற்றப்படும் நபராக விஜயகாந்த் இருக்கிறார். ஆனால் விஜயகாந்த்தை விட ஒரு நல்ல மனிதன் தமிழ் சினிமாவில் இருக்கிறார் அவர் வேறு யாரும் இல்லை நடிகர் பிரபு தான் என்று கூறுகிறார் மாணிக்கம் நாராயணன்.

நடிகர் பிரபு:

பிரபு நடிகர் அஜித்தை வைத்து ஆசல் என்ற படத்தை தயாரித்தார் அந்த திரைப்படத்தை சிவாஜி பிராடெக்சன் என்னும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். ஆனால் அந்த படம் ஓடாததால் பெரிதாக பண இழப்பை சந்தித்தார் பிரபு.

அதற்கு பிறகு சிவாஜி புரொடக்ஷனுக்காக ரஜினி சந்திரமுகி திரைப்படத்தில் நடித்து கொடுத்தார். ஆனால் அஜித் திரும்ப கைமாறாக எந்த ஒரு திரைப்படத்திலும் அவருக்கு நடித்து கொடுக்கவில்லை இருந்தாலும் கூட பிரபு அதை ஒரு பெரிய விஷயமாக கண்டு கொள்ளவில்லை. பிரபு மாதிரி ஒரு நபரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது என்று கூறுகிறார் மாணிக்கம் நாராயணன்.

Articles

parle g
madampatty rangaraj
To Top