ஜெய் பீம் திரைப்படத்தின் மூலமாக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகர் மணிக்கண்டன். அதற்கு முன்பே மணிகண்டன் விக்ரம் வேதா, ககக போ ஆகிய திரைப்படங்களில் எல்லாம் நடித்து வந்துள்ளார்.
சொல்லப்போனால் மிகவும் போராடிதான் மணிகண்டன் நடிப்பதற்கான வாய்ப்பையே பெற்றார். ஜெய் பீம் திரைப்படத்தில் சில நிமிடங்களே வரும் காட்சி என்றாலும் கூட மணிகண்டனின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
மேலும் மணிகண்டன் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு குட் நைட், லவ்வர் மாதிரியான திரைப்படங்களில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. மேலும் சமீபத்தில் அவருடைய நடிப்பில் நான்காவது திரைப்படமாக குடும்பஸ்தன் திரைப்படம் வெளியானது.
நடிப்பு மட்டுமின்றி திரைக்கதை, உதவி இயக்குனர் என பல துறைகளில் பணிப்புரிந்தவர் மணிகண்டன். எனவே அடுத்து திரைப்படத்தை இயக்குவது மீது ஈடுபாடு காட்டி வருகிறாராம் மணிகண்டன். அந்த வகையில் அடுத்து விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் மணிகண்டன்.
இந்த கதை விஜய் சேதுபதிக்கும் மிகவும் பிடித்துவிட்டது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியும் அதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். எனவே விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கதாநாயகனாக பிரபலமாகி வரும் நிலையில் இந்த முயற்சி தேவைதானா? என இதுக்குறித்து ரசிகர்கள் கருத்து எழுப்பி வருகின்றனர்.