Latest News
ரஜினி கமல் கூட எனக்கு அதை செய்யலை.. மனம் வருந்தி வரும் இயக்குனர் மணிரத்தினம்!..
இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே முக்கியமான இருந்து வருகிறார். வழக்கமான திரைப்படங்களில் இருந்து சற்று மாறுபட்ட கதைக்களங்களை படமாக்கியவர் நடிகர் இயக்குனர் மணிரத்தினம்.
அவர் இயக்கிய தளபதி, நாயகன் மாதிரியான திரைப்படங்கள் அப்பொழுது எல்லாம் அதிகமாக வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. பல நடிகர் நடிகைகளிடம் பிடித்த படங்கள் என்று கேட்கும் பொழுது அதில் ஒரு படமாவது மணிரத்தினத்தின் திரைப்படம் இருப்பதை பார்க்க முடியும்.
எனக்கு அதை செய்யலை
அந்த அளவிற்கு புதுப்புது திரைக்கதைகளை படமாக்கியவர் மணிரத்தினம். மணிரத்தினத்திற்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்த திரைப்படம் என்றால் அதே பொன்னியின் செல்வன் திரைப்படம்.
கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வனை பல வருடங்களாக பலரும் திரைப்படமாக நினைத்தனர். எம்.ஜி.ஆரின் துவங்கி ரஜினிகாந்த் சரத்குமார் என்று பலரும் அதில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டனர்.
இயக்குனர் மணிரத்தினம்
ஆனால் அப்போதைய காலகட்டங்களில் அது கைகூடவில்லை இறுதியாக அதை மணிரத்தினம்தான் சாத்தியமாக்கினார். இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் பிறகு கிடைத்தது. இது குறித்து மணிரத்தினம் அவரது நண்பர் ஒருவரிடம் கூறும் பொழுது நான்கு தேசிய விருது வாங்கிய பிறகும் கூட அதிகாரப்பூர்வமாக யாருமே என்னை பாராட்டவில்லை.
தமிழ் பிரபலங்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை தெலுங்கு சினிமாவாக இருந்தால் இந்நேரம் கொண்டாடி இருப்பார்கள் என்று மணிரத்தினம் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. சின்ன சின்ன இயக்குனர்களின் படங்கள் நன்றாக இருந்தால் கூட அதை வாழ்த்தி ஒரு பதிவாக ரஜினிகாந்த் சமூக வலைதளங்களில் போடுவார்.
ஆனால் அவர்கள் மணிரத்தினத்தை வாழ்த்தி பதிவு போடாதது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்