Connect with us

தப்பா பேசியிருந்தா மன்னிச்சுக்கோங்க மேடம்!.. மன்சூர் அலிக்கான் எஸ்கேப்பு… ஆனா குஷ்புதான் பாவம்!.

mansoor alikhan trisha

News

தப்பா பேசியிருந்தா மன்னிச்சுக்கோங்க மேடம்!.. மன்சூர் அலிக்கான் எஸ்கேப்பு… ஆனா குஷ்புதான் பாவம்!.

Social Media Bar

தமிழில் உள்ள வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மன்சூர் அலிக்கான். தற்சமயம் வரும் படங்களில் எல்லாம் வில்லன் நடிகர்கள் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் மன்சூர் அலிக்கானும் காமெடி கதாபாத்திரமாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ்க்கு பிடித்த நடிகர் என்பதால் அவரை லியோ படத்திலும் நடிக்க வைத்தார் லோகேஷ். இந்த நிலையில் இடையில் பேட்டி ஒன்றில் பேசும்போது சர்ச்சையான விஷயம் ஒன்றை பேசியிருந்தார் மன்சூர் அலிக்கான்.

அதாவது முன்பெல்லாம் வில்லன் நடிகர்களுக்கு படுக்கையறை காட்சிகள் இருக்கும். ஆனால் இப்போது எல்லாம் எங்களுக்கு அப்படியான காட்சிகளே இல்லை. இதனால் நான் திரிஷாவை பார்க்கவே இல்லை என கூறியிருந்தார். இதனால் கோபமான த்ரிஷா இந்த பேச்சை கண்டித்து பேசியிருந்தார்.

மேலும் நடிகர் சங்கமும் இதற்காக நடவடிக்கை எடுக்க போவதாக கூறியிருந்தது. மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்த குஷ்புவும் மகளிர் அமைப்பின் மூலமாக மன்சூர் அலிக்கான் மீது வழக்கு போட்டார். இவ்வளவு நடந்த பிறகும் மன்னிப்பு எதுவும் கேட்க முடியாது என கூறிவிட்டார் மன்சூர் அலிக்கான்.

ஏனெனில் நகைச்சுவையாக இருக்கட்டும் என்றுதான் அப்படி பேசினேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. மேலும் நடிகர் சங்கமும் என்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. எனவே நான் மன்னிப்பு கேட்க முடியாது என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்றும் இந்த பிரச்சனை பெரிதாக சென்றதால் காவல் நிலையம் சென்ற மன்சூர் அலிக்கான். நான் நகைச்சுவைக்காகதான் அப்படி பேசினேன். அது த்ரிஷாவிற்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்கு விசாரனைக்கு வந்தாலும் அதுக்குறித்து நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக உள்ளேன் என எழுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

ஆனால் இந்த பிரச்சனைக்கு நடுவே குஷ்பு குறித்து கமெண்ட் செய்த ஒருவரை “இந்த மாதிரி சேரி பாஷையில் என்னால் பேச முடியாது” என பதிலளித்திருந்தார். சேரி மக்கள இப்படி கீழ்தரமாக பேசியதற்காக அவரை விமர்சித்து வந்தனர் நெட்டிசன்கள்.

அதோடு இல்லாமல் குஷ்பு மேலும் சேரி என்பதற்கு பிரஞ்சு மொழியில் அன்பான என அர்த்தம் நான் அந்த அர்த்தத்தில்தான் பேசினேன் என்று கூறினார். அதனால் குஷ்புதான் தற்சமயம் கண்டெண்ட் ஆகியுள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top