News
விஜய் அரசியலுக்கு வரார்னு நான் போய் பதுங்க முடியுமா!.. சரவெடி பதில் கொடுத்த மன்சூர் அலிக்கான்!.
Actor Vijay : தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மன்சூர் அலிகான். மன்சூர் அலிகான் பல திரைப்படங்களில் கொடூரமான வில்லனாக நடித்திருக்கிறார். முக்கியமாக விஜயகாந்த் திரைப்படங்களில் மன்சூர் அலிகான் அதிகமாக வில்லனாக நடித்திருக்கிறார்.
அதனாலயே இவருக்கும் விஜயகாந்திற்க்கும் இடையே நல்ல நட்பு உண்டு. சில காலங்களுக்கு பிறகு மன்சூர் அலிக்கானுக்கு திரையில் வாய்ப்புகள் குறைந்தன. அதற்கு பிறகு வாய்ப்புகள் குறைத்து வந்ததால் அரசியலுக்கு சென்றார் மன்சூர் அலிகான்.
அரசியலுக்கு சென்றாலும் கூட அடிக்கடி சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அதுவே மன்சூர் அலிக்கானை எப்போதும் பிரபலமாகவும் வைத்திருக்கிறது. சமீபத்தில் சரக்கு திரைப்படம் குறித்த பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது திரிஷாவை குறித்து அவர் பேசிய விஷயங்கள் அதிக சர்ச்சையானது.

அதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் அவர் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் அளவிற்கு அந்த பிரச்சனை சென்றது. அவர் நடித்திருக்கும் சரக்கு என்கிற திரைப்படம் போன மாதம் வெளியானது. ஆனால் அது பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் 2021 வரை நாம் தமிழர் கட்சியில் ஈடுபாட்டோடு பணிபுரிந்து வந்த மன்சூர் அலிகான் அதற்குப் பிறகு அதிலிருந்து வெளியேறி தமிழ் தேசிய புலிகள் என்கிற புதிய கட்சியை துவங்கினார். அந்த கட்சியை துவங்கி 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார் ஆனால் அதில் தோல்வியைதான் கண்டார் மன்சூர் அலிக்கான்.
இந்த நிலையில் தற்சமயம் தன்னுடைய கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என்று மாற்றம் செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பேட்டி அளிக்கும்போது அவரிடம் பத்திரிகையாளர்கள், விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு பதில் அளித்த மன்சூர் அலிக்கான் விஜய் கட்சி தொடங்குகிறார் என்பதற்காக நான் ஓடி போய் பதுங்கி கொள்ள முடியுமா? தற்சமயம் விஜய் கோட் திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். நாளைக்கு யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை எங்களுடைய கட்சியின் கொள்கைகள் பக்கம் நாங்கள் நிற்க வேண்டும்.
நான் 40 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன் தேர்தலில் தனி கட்சியாக போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியிருக்கிறார் மன்சூர் அலிகான்.
