ஒரு இடம் வாங்கணும்.. சிக்கலில் இருந்த ரஜினி- உதவிக்கரம் நீட்டிய எம்.ஜி.ஆர்!..
தமிழில் ஹிட் படங்களுக்கு பிரபலமானவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் அவர் நடித்த படங்களில் முக்கால்வாசி திரைப்படங்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இதனாலேயே இப்போதுவரை தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாத நடிகராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.
மற்ற நடிகர்களை போல ரஜினிகாந்தும் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும்போது பல கஷ்டங்களை அனுபவித்தார். அப்போதைய காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்குமிடையே பெரும் மோதல் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் ரஜினிக்கு எம்.ஜி.ஆர் பலதடவை உதவிகள் செய்துள்ளார். அதில் முக்கியமான நிகழ்வு ரஜினி வாங்கிய ராகவேந்திரா மண்டபத்தில் நேர்ந்த சிக்கல். ரஜினி நன்றாக பணம் சம்பாதிக்க துவங்கியபோது சென்னையில் ஒரு இடம் வாங்கி அங்கு திருமண மண்டபம் கட்டலாம் என முடிவு செய்தார்.

ஒரு இடமும் விற்பனைக்கு வந்தது. ரஜினிகாந்தும் அதற்கு அட்வான்ஸ் தொகையை கொடுத்தார். ஆனால் தவறுதலாக அந்த இடத்தின் உரிமையாளர் ரஜினிகாந்திடம் அட்வான்ஸ் வாங்கியது போலவே வேறொரு நபரிடமும் அட்வான்ஸ் தொகை வாங்கியதால் இடம் யாருக்கு என்கிற சிக்கல் வந்தது.
இந்த நிலையில் உதவி நாடி எம்.ஜி.ஆரிடம் சென்றார் ரஜினிகாந்த். விசயத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் உடனே அந்த மற்றொரு நபரையும் அழைத்து பேசி அந்த இடத்தை ரஜினிகாந்திற்கே முடித்து கொடுத்துள்ளார். அந்த இடத்தில்தான் பிறகு ரஜினி ராகவேந்திரா திருமண மண்டபத்தை கட்டினார்.