எனக்கு சப்போர்ட் பண்ணா நீ தோத்துறவ? –  பாக்கியராஜை நிராகரித்த எம்.ஜி.ஆர்!

தமிழின் பழைய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாரதிராஜாவிற்கு உதவி இயக்குனராய் இருந்த இவர் மிக குறுகிய காலத்திலேயே இயக்குனராகி பிறகு கதாநாயகனாகவும் ஆனார்.

Social Media Bar

தனிப்பட்ட திரைக்கதையாக்கும் இவரது திறனே அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பாக்கியராஜ் எம்.ஜி.ஆர் மீது பெரும் அன்பு கொண்டவர். அவரது பல படங்களில் கூட எம்.ஜி.ஆரை காட்டும் விதத்தில் காட்சிகள் வைத்திருப்பார்.

அவசர போலீஸ் 100 என்ற படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கை மகனாக பாக்கியராஜ் நடித்திருப்பார். பாக்கியராஜின் படங்கள் வெளியாவதற்கு முன்பே அதை ஒருமுறை எம்.ஜி.ஆர் பார்த்துவிட்டு அதுக்குறித்து கருத்து சொல்வது வழக்கம்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் பாக்கியராஜ் பேசும்போது எம்.ஜி.ஆருக்கு சப்போர்ட் பண்ணி பேசினாராம். உடனே தனியே அழைத்த எம்.ஜி.ஆர், பாக்கியராஜை கண்டித்தாராம்.

அதற்கு “நான் எதுவும் தவறாக பேசவில்லையே?” என கூறியுள்ளார் பாக்கியராஜ். அதற்கு எம்.ஜி.ஆர் “சினிமாவில் அதிக ரசிகர்களை பெறுவதற்கு எனக்கு அதிக காலம் ஆனது. ஆனால் நீ குறைந்த காலக்கட்டத்திலேயே பெரும் ரசிகர்களை பெற்றுள்ளாய். அதில் அதிமுக, திமுக என இரு கட்சி ஆட்களும் இருப்பார்கள். இப்போது எனக்கு நீ சப்போர்ட் செய்தால் அதனால் உனது ரசிகர்கள் குறைவார்கள். எனவே எந்த ஒரு கட்சிக்கும் எப்போதும் சப்போர்ட் செய்யாதே?” என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வை நடிகர் பாக்கியராஜே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்