ஆர் ஜே பாலாஜியின் அடுத்த படம்? – பிப்ரவரிக்கு திரையில்!

எஃப்.எம் ரேடியோவில் ஆர்.ஜேவாக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் ஆர்.ஜே பாலாஜி. காமெடியனாக சினிமாவிற்கு வந்தவர் பிறகு காமெடி ஹீரோவாக மாறினார்.

இதுவரை இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் லோ பட்ஜெட் என்றாலும் வித்தியாசமான கதைகளத்தை கொண்டு எண்டர்டெயின்மெண்டாக செல்வதால் ஹிட் கொடுத்துள்ளன.

இதை தொடர்ந்து வரிசையாக ஆர்.ஜே பாலாஜிக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இவர் நடித்த எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் போன்ற படங்களை தொடர்ந்து தற்சமயம் இவர் நடித்து வெளியாக இருக்கும் படம் ரன் பேபி ரன்.

இது ஒரு த்ரில்லர் படம் என கூறப்படுகிறது. அதே சமயம் ஆர்.ஜே பாலாஜி நடித்துள்ளதால் இது நகைச்சுவை படமாகவும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது.

Refresh