Tech News
மாறிவரும் ஸ்மார்ட்போன் ட்ரெண்ட்.. சாம்சங் செய்த முதல் வேலை.
ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பு வரை பட்டன் மொபைல்களில் நிறைய மாடல்களில் மொபைல் போன்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் ஸ்மார்ட்போன் என்று வந்த பிறகு மாடலில் எந்த ஒரு வித்தியாசத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
எல்லா ஸ்மார்ட் ஃபோனுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் இருக்கும். அதில் இருக்கும் அம்சங்கள் மட்டுமே மாறுபடும் என்கிற நிலை உருவானது. எனவே கேமரா மெமரி மாதிரியான விஷயங்களில் மேம்பாடுகள் இருக்குமே தவிர மொபைல் போனின் மாடலில் எந்த ஒரு பெரிதான மேம்பாடுகளையும் பார்க்க முடியாது.
இந்த நிலையில் இப்பொழுது கேமரா போன்ற அம்சங்களை எல்லாம் தாண்டி மொபைல் போனின் எடை மற்றும் அதன் அகலம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
மிகவும் மெல்லிசான மொபைல் போனை யார் போடுவது என்பதுதான் இப்பொழுது மொபைல் நிறுவனத்திற்கு இடையே பெரும் போட்டியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்சமயம் சாம்சங் நிறுவனம் சாம்சங் எஸ் 25எட்ஜ் என்கிற மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் தான் இதுவரை வந்த மொபைல்களிலேயே மெலிதான மொபைல் என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்டமாக இதைவிட மெலிதாக யார் மொபைல் போன் போடுவது என்பதுதான் போட்டியாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
