Connect with us

அஜித் பட நடிகையா இது? – மோனிகா ஓ மை டார்லிங் – ஒரு பார்வை

Movie Reviews

அஜித் பட நடிகையா இது? – மோனிகா ஓ மை டார்லிங் – ஒரு பார்வை

cinepettai.com cinepettai.com

தற்சமயம் பாலிவுட்டில் வெளியாகி இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆகி வரும் திரைப்படம்தான் மோனிகா ஓ மை டார்லிங். 

பாலிவுட்டில் பிரபலமான நடிகரான ராஜ்குமார் ராவ் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதைப்படி அடித்தட்டு நிலையில் இருந்து வந்தவராக கதாநாயகன் இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு பெரும் தொழிலதிபரின் பெண்ணை இவர் காதலிக்கிறார். எனவே அந்த நிறுவனத்தின் தலைவராவதற்கான வாய்ப்பு கதாநாயகனுக்கு கிடைக்கிறது. ஆனால் அதே நிறுவனத்தில் பணிப்புரியும் மோனிகா என்கிற பெண்ணுடன் கதாநாயகனுக்கு தொடர்பாகிறது.

இந்த மோனிகா கதாபாத்திரத்தில் நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார். இவர் வலிமை திரைப்படத்தில் அஜித்தோடு நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் இவர் பயங்கர கவர்ச்சியில் நடித்துள்ளார்.

மோனிகா தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கதாநாயகன் தான் காரணம் என கூறி மிரட்டுகிறார். இந்நிலையில் இதே போல அலுவலகத்தில் பணிப்புரியும் மேலும் இருவரையும் இவர் மிரட்டி வருவது பின்னர் கதாநாயகனுக்கு தெரிகிறது.

எனவே மோனிகாவை கொல்வதற்கு மர்மமான முறையில் இந்த மூவரும் திட்டமிடுகின்றனர். ஆனால் மோனிகா சாவதற்கு பதிலாக திட்டமிட்டவர்களில் ஒவ்வொருவரும் மர்மமாக இறக்கின்றனர். இந்த நிலையில் இந்த மர்மத்தில் இருந்து கதாநாயகன் எப்படி விடுப்படுகிறார். கொலையாளியை எப்படி கண்டறிகிறார் என கதை செல்கிறது. 

முடிந்த அளவு படத்தை சுவாரஸ்யமாக கொண்டு சென்றார் படத்தின் இயக்குனர் வாசன் பாலா.

POPULAR POSTS

kamalhaasan gautham menon
sathyaraj arjun
dhanush ilayaraja
raghava lawarance lokesh kanagaraj
vijayakanth
vijay - atlee
To Top