Cinema History
எனக்கு அந்த பொண்ணுதான் பாட்ட பாடணும்!.. எம்.எஸ்.வி தரகுறைவாக பேசியதால் கடுப்பான கண்ணதாசன்!..
Kannadasan and MSV : கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு துறையும் அந்த துறை சார்ந்த நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. உதாரணமாக இசைத்துறையை பொறுத்தவரை இசையமைப்பாளர்தான் பாடலாசிரியர் மற்றும் பாடகர்களை தேர்ந்தெடுப்பார்.
அதில் வேறு யாரும் மூக்கை நுழைக்க முடியாது. எம்.ஜி.ஆர் மாதிரியான பெரும் நடிகர்கள் மட்டும் அனைத்து துறைகளிலும் அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்ப ஆட்களை மாற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் யாரை பாடலில் பாட வைத்தது என்பது தொடர்பாக எம்.எஸ்.விக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு பெரும் பஞ்சாயத்து நிகழ்ந்திருக்கிறது.
மகாதேவி என்கிற திரைப்படத்திற்கு எம் எஸ் விதான் இசையமைத்து வந்தார். அந்த படங்களுக்கான பாடல்களை கண்ணதாசன் எழுதி வந்தார் இருவருமே அப்பொழுது திரைத்துறையில் பெரும் ஜாம்பவான்களாக இருந்து வந்தனர்.
அப்பொழுது அந்த திரைப்படத்தில் ஒரு உணர்ச்சிகரமான பாடல் ஒன்று இடம்பெற்றது. அதற்கான வரிகளை கண்ணதாசன் எழுதிய பொழுது ஜமுனா ராணி என்கிற பாடகிதான் இந்த பாடலை பாட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார். ஆனால் எம் எஸ் வி க்கு இதில் உடன்பாடு இல்லை.
ஏனெனில் ஜமுனா ராணி பொதுவாகவே கவர்ச்சி பாடல்கள்தான் அதிகமாக பாடக்கூடியவர். இப்படி உணர்ச்சிகரமான ஒரு பாடலை அவரால் பாட முடியாது என்பது எம் எஸ் வியின் எண்ணமாக இருந்தது. இது கண்ணதாசனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
எனவே எம்எஸ்வியிடம் சென்று பேசிய கண்ணதாசன் அவரை வைத்து அந்த பாடலை பதிவு செய்யுங்கள் ஒருவேளை அது நன்றாக இல்லை என்றால் அதற்கு ஆன செலவை நானே கொடுத்து விடுகிறேன் என்று கூறியிருக்கிறார் கண்ணதாசன். சரி என்று எம்.எஸ்.வியும் அதற்கு ஒப்புக்கொண்டார். அதன் பிறகு ஜமுனா ராணிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி. ஆனால் அந்த பாடலை மிகச் சிறப்பாக பாடி இருக்கிறார் ஜமுனா ராணி.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்