vanangaan arun vijay

வணங்கான் பேசப்போற விஷயம் ஒன்றிய அரசுக்கு எதிரா இருக்குமா? தேர்தல் நேரத்தில் குட்டையை குழப்பிய பாலா!..

News Tamil Cinema News

Vanangaan Tamil movie: தற்சமயம் இயக்குன பாலா இயக்கத்தில் தமிழில் தயாராகி வரும் திரைப்படம்தான் வணங்கான். முதலில் இந்த திரைப்படத்தில் சூர்யாதான் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால் பிறகு இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவிற்கும் ஒத்து வராத காரணத்தினால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார்.

தற்சமயம் இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாகவும், மத அரசியலுக்கு எதிராகவும் திரைப்படங்கள் வந்துக்கொண்டுள்ளன.

arun vijay
arun vijay

அப்படி வரும் திரைப்படங்களில் ஒன்றாகதான் வணங்கான் திரைப்படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த படத்தின் ட்ரைலரில் பார்க்கும்போது திருவள்ளுவருக்கு காவி பூச நினைக்கும் கும்பலை காட்டியுள்ளனர். திருவள்ளுவர் பிராமணர் என்பதாக அவர் மீது அடையாளத்தை புகுத்த வெகு நாட்களாக முயற்சித்து வருகின்றனர்.

இதனை படத்திலும் காட்டியுள்ளனர். அப்படி செய்கிற பெண்ணை கதாநாயகன் அடிப்பது போலவும் காட்சிகள் இருக்கின்றன. அதே போல படத்தில் கிருஸ்துவ மதமாற்றம் குறித்தும் பேசியிருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இதற்கு நடுவே இந்த மத அரசியல் தெரியாத கடவுள் நம்பிக்கை கொண்ட மக்கள் அதிகம். அப்படியான மக்களில் ஒருவராக இருக்கும் அருண் விஜய் இதை அலசுவதாக கதை இருக்கும் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வரும் இந்த நேரத்தில் இப்படியான ஒரு படத்தை எடுத்துவிட்டாரா பாலா என்பதே பலருக்கு அதிர்ச்சியான விஷயமாக அமைந்துள்ளது.