Connect with us

இப்படி பண்ணினா உடனே குழந்தை பிறக்குமா? நடிகர் நானி சர்ச்சை கருத்து…

News

இப்படி பண்ணினா உடனே குழந்தை பிறக்குமா? நடிகர் நானி சர்ச்சை கருத்து…

Social Media Bar

Naani and “Hi Naana” : தெலுங்கு நடிகர் நானி, இவருடைய முதல் தமிழ் படம் நான் “ஈ”,  சமந்தா, சுதீப் போன்றவர்கள் நடித்து வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற படம்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்து திரைக்கு வரவிருக்கும் படம் “Hi Naana”. இந்த படம் தமிழ் மொழியில் வெளியான “DADA” திரைப்படத்தை போன்ற கதைக்களம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் நானிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை மிருணாள் தாகூர் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது படக்குழு.

அதற்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சந்திப்பில் இந்த படத்தில் மூன்றுக்கும் அதிகமான முத்தக்காட்சிகள் இடம்பெற்றுள்ளது அதனால் ரசிகர்கள் மனதில் சங்கடத்தை ஏற்படுத்தாதா? கலாச்சார பிரச்சனைகளை உண்டாக்காதா?என்ற கேள்வியை செய்தியாளர் கேட்டார்.

அதற்கு நானி முத்தக்காட்சிகளால் எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை. நம்முடைய சிறுவயதில் லைட் ஆப் செய்தால் குழந்தை பிறக்கும் என்ற ஒரு கற்பனையைத்தான் திரையுலகம் நமக்கு புகுத்தியது.

அதன்பிறகு முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்கும் போன்றதொரு விஷயத்தை நமக்கு புகுத்தியது. நாம் இன்னும் சிறுவயதிலே இல்லை அதனால் இதுபோன்றதொரு விஷயங்களால் யார் மனமும் புண்படப்போவதில்லை.

இப்போது எல்லோரும் மெச்சூரிட்டியாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள் இதனை நிச்சயம் புரிந்துகொள்வார்கள் என்ற கருத்தை தெரிவித்தார். இந்த படம் மட்டுமல்ல பல படங்களில் முத்தக்காட்சிகள் இடம் பெற ஆரம்பித்துவிட்டது. இதிலிருந்து நம் கலாச்சாரம் மாறிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top