Anime
விரைவில் தமிழில் வரவிருக்கும் நருட்டோ ஷிப்புடன்!.. குதுகலத்தில் அனிமே ரசிகர்கள்…
உலக அளவில் ஜப்பான் அனிமேவிற்கான ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். அதிலும் நருட்டோ எப்போது தமிழில் வந்ததோ அது முதல் தமிழில் அனிமே பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 90ஸ் கிட்ஸ்களை பொறுத்தவரை அவர்கள் கார்ட்டூன் மீது பெரும் ஈர்ப்பு கொண்டவர்கள்.
என்னதான் அவர்கள் வளர்ந்துவிட்டாலும் இந்த கார்ட்டூன் தொடர்கள் மீது இருக்கும் ஆர்வம் மட்டும் குறைவதில்லை. எனவேதான் அவர்கள் அதிகமாக ஜப்பான் அனிமே தொடர்களை பார்க்கின்றனர்.
நருட்டோ கதை:
நருட்டோ சீரிஸை பொறுத்தவரை ஜப்பானில் இருக்கும் ஒரு கிராமத்தில் நைன் டெயில் ஃபாக்ஸ் என்னும் மிருகம் ஊரையும் மக்களையும் அச்சுறுத்திக்கொண்டுள்ளது. அப்போது ஹொக்காகே என அழைக்கப்படும் நான்கு ஊர் தலைவர்கள் இணைந்து அந்த நைன் டெயில் ஃபாக்ஸை அடக்குகின்றனர்.
ஆனால் அதை முழுவதுமாக அழிக்க முடியவில்லை. எனவே ஒரு குழந்தையின் உடலில் அதை சிறை வைக்கின்றனர். அந்த குழந்தைதான் நருட்டோ. அவன் உடலில் நைன் டெயில் ஃபாக்ஸின் காரணமாக எக்கச்சக்கமான சக்திகள் இருக்கின்றன.
எப்போதெல்லாம் நருட்டோ உணர்ச்சிவசப்படுகிறானோ அப்போதெல்லாம் நைன் டெயில் ஃபாக்ஸின் சக்தியானது வெளிப்படும். இந்த நிலையில் அதை நருட்டோ கட்டுப்படுத்துவதை வைத்து கதை செல்கிறது. நருட்டோவின் சிறு வயதோடு இந்த கதை முடிவடைகிறது.
நருட்டோ ஷிப்புடன்:
நருட்டோ கிளாசிக்ஸ் சீரிஸை அடுத்து நருட்டோ ஷிப்புடன் எப்போது தமிழில் வரும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக நருட்டோ ஷிப்புடன் சீரிஸ் தமிழில் வரவிருக்கிறது.
நருட்டோ மற்றும் சாசுக்கே இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதோடு அந்த சீரிஸ் முடிந்துவிட்டது. அதனை தொடர்ந்து அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது.
அதனால் ஷிப்புடன் சீரிஸிற்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஷிப்புடன் சீரிஸ் விரைவில் வரும் என நருட்டோ டப்பிங் குழு அறிவித்ததுடன் அதன் ட்ரைலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
இதனால் அனிமே ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்