மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நிவின்பாலி. நேரம் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் நிவின்பாலி.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகராக நிவின் பாலி இருந்து வருகிறார். அவ்வபோது தமிழில் ஏதாவது ஒரு திரைப்படத்தில் இவர் நடித்து வருவது வழக்கம்.
ஏற்கனவே இவர் நயன்தாராவுடன் சேர்ந்து லவ் ஆக்சன் ட்ராமா என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வெகு வருடங்களுக்குப் பிறகு இப்பொழுது மீண்டும் நயன்தாரா நிவின்பாலி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் டியர் ஸ்டூடண்ட்ஸ்.
இந்த திரைப்படம் மாணவர்களை அடிப்படையாக வைத்து செல்லும் என்றாலும் கூட நிவின்பாலி தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். கதாநாயகி என்றாலும் கூட படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக நயன்தாரா இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நயன்தாரா இந்த திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.