Hollywood Cinema news
பாதியிலேயே முடிச்சிவிட்ட ஸ்குவிட் கேம் மூன்றாம் சீசன்.. இன்னும் கொடூரமா இருக்கும் போல.!
ஹாலிவுட்டில் பிரபலமான பல சீரிஸ்கள் இருக்கின்றன. அவற்றிற்கு இங்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அப்படியாக வரவேற்பை பெற்ற சீரிஸ்களில் ஸ்குவிட் கேம் முக்கியமான சீரிஸ் ஆகும்.
ஸ்குவிட் கேம் சீரிஸை பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய பரிசு தொகைக்காக அங்கு கேம் விளையாட செல்வார்கள். ஒவ்வொரு விளையாட்டிலும் நிறைய நபர்கள் கொலை செய்யப்படுவார்கள். இந்த நிலையில் இறுதி வரை தாக்கு பிடிக்கும் நபர்களுக்கு தொகையை பிரித்து கொடுத்துவிடுவார்கள்.
சில பணக்காரர்களின் மகிழ்ச்சிக்காக இந்த விளையாட்டு ஒரு தீவில் நடத்தப்படும். இந்த நிலையில் முதல் சீசனில் இந்த ஸ்குவிட் கேம்க்குள் சென்று வெளியேறுவார் கதாநாயகன். அதனை தொடர்ந்து அவர்களை பழி வாங்க இரண்டாம் சீசனில் மீண்டும் அந்த விளையாட்டுக்குள் இவர் செல்கிறார்.
இந்த நிலையில் அவரை பிடிப்பதற்காக கேமை நடத்தும் தலைவனே அந்த கேமுக்குள் வருகிறான். அதை வைத்து இரண்டாம் சீசன் சென்று கொண்டிருந்தது. ஆனால் பாதியிலேயே இரண்டாம் சீசன் முடிந்துவிட்டது.
மீதி கதை மூன்றாம் சீசனில்தான் வரும் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்சமயம் மூன்றாம் சீசனுக்கு ட்ரைலர் வெளியாகியுள்ளது. மேலும் மூன்றாம் சீசன் ஜுன் 27 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
