TV Shows
சன் டிவியில் அறிமுகமாகும் புதிய தொடர்… முக்கிய சீரியலை முடித்துவிடும் சன் டிவி..!
சின்னத்திரையில் தொடர்ந்து டி.ஆர்.பி சண்டை என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. தற்சமயம் இருக்கும் சின்னத்திரை சேனல்களில் ஜீ தமிழ், விஜய் டிவி மற்றும் சன் டிவி ஆகிய மூன்று சேனல்கள்தான் அதிக பிரபலமானதாக இருக்கின்றன.
இவை மூன்றுமே சீரியல்களுக்கு பிரபலமானவையாக இருக்கின்றன. டி.ஆர். பி ரேட்டிங்கை பொறுத்தவரை சன் டிவி சீரியல்களில் கயல் சீரியலும் விஜய் டிவி சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியலும்தான் போட்டியிட்டு வருகின்றன. அதிக டி.ஆர் பி ரேட்டிங் உள்ள நாடகங்களுக்கு விளம்பரங்களும் அதிகமாக கிடைக்கும்.
இதனால் டி.ஆர்.பி குறைவாக இருக்கும் நாடகங்கள் அப்படியே நீடித்தது என்றால் பாதியிலேயே அதை முடித்துவிடுவார்கள். சன் டிவியில் நிறைய சீரியல்கள் இப்படி வேகமாக முடிக்கப்பட்டதை பார்க்க முடியும். இப்படியான நிலையில் டி.ஆர் பியில் குறைவாக இருக்கும் இரண்டு சீரியல்களை முடிப்பதற்கு முடிவெடுத்துள்ளதாம் சன் டிவி.
மேலும் தமிழ் பிரபலங்களை கொண்டு பராசக்தி என்கிற பெயரில் புது சீரியல் ஒன்று அறிமுகமாக உள்ளது. இந்த சீரியலில் டெப்ஜனி, ரமேஷ் கண்ணா, அஜய் ரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.
இந்த நிலையில் எந்த சீரியலை சன் டிவி முடித்து விட போகிறார்கள் என்பதுதான் இப்போது சீரியல் ரசிகர்களின் கவலையாக இருக்கிறது அந்த வகையில் சிங்க பெண் சீரியல் முடிவதற்கான வாய்ப்பு உள்ளது என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
