பத்திரிக்கையாளரின் சாவுக்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள்.. இது விஜய் அஜித் பஞ்சாயத்தை விட பெரும் பஞ்சாயத்து போல!..
Tamil cinema old Actors : மக்களிடம் செய்திகளை சொல்வதில் பத்திரிகைகள் என்பவை பெரும் பங்கு வகிக்கின்றன. பிரபலங்கள் அரசியல்வாதிகள் பற்றிய செய்திகளை மக்களுக்கு சொல்லும் ஒரு பாலமாக பத்திரிகைகள் இருக்கின்றன.
இவற்றில் சினிமா தொடர்பான பத்திரிகையாளர்கள் தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டம் முதலே இருந்து வருகின்றனர் இவர்கள் சினிமா தொடர்பான ஆட்களுடன் பழக்கத்தில் இருப்பதால் தொடர்ந்து சினிமா தொடர்பான பல அப்டேட்களை வழங்கி வருவதை பார்க்க முடியும்.
இப்படி தியாகராஜ பாகவதர் காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவர்தான் லட்சுமி கந்தன் என்னும் பத்திரிக்கையாளர். இந்த பத்திரிகையாளர் தொடர்ந்து சினிமா குறித்த விஷயங்களை அப்போது எழுதி வந்தார். அதில் முக்கியமாக பிரபலங்கள் குறித்த அந்தரங்க விஷயங்களை எழுதுவதில் இவர் முக்கியமான பத்திரிக்கையாளராக இருந்தார்.

ஆனால் பத்திரிகையில் எழுதும் பொழுது பெரும் பெரும் பிரபலங்களை எல்லாம் சுட்டிக்காட்டி அவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தின. முக்கியமாக எம் கே பாகவதர் மற்றும் என் எஸ் கிருஷ்ணன் பற்றியெல்லாம் நிறைய கட்டுரைகளை எழுதி இருக்கிறார் பத்திரிகையாளர் லட்சுமி கந்தன்.
அவர் எழுதிய கட்டுரை அவர்கள் இருவருக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தியது. அதனால் அவர்கள் இருவரும் பிரிந்தனர் இந்த நிலையில் ஒருநாள் லட்சுமி கந்தன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் அந்த கொலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இருந்தாலும் எம்.கே பாகவதர் மற்றும் என்.எஸ் கிருஷ்ணனுக்கு அதற்காக அப்பொழுது சிறை தண்டனைகள் வரை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவிலேயே பத்திரிகையாளர் குறித்து இவ்வளவு சர்ச்சைகள் எழுந்தது என் எஸ் கிருஷ்ணன் மற்றும் எம் கே பாகவதர்க்கு தான்