News
கே.ஜி.எப் கூட்டணியில் அடுத்து ஜூனியர் என்.டி.ஆரா?- இணையத்தில் வெளியான திடீர் அறிக்கை..!
கர்நாடாகவில் திரைப்படமாக்கப்பட்டு இந்தியா முழுவதும் பேசப்பட்ட முக்கியமான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. இயங்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த திரைப்படம் இதுவரை 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்துள்ளது. கர்நாடக சினிமாவில் பேன் இந்தியா லெவலில் வெளியாகி இவ்வளவு பிரபலமான முதல் திரைப்படம் கே.ஜி.எஃப் என கூறலாம்.

கே.ஜி.எஃப் 2 வெளியான நிலையில் அதன் மூன்றாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எஃப் 3 திரைப்படத்தில் ஏற்கனவே ராணா டகுபதி மற்றும் பிரபாஸ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடிப்பதாக கே.ஜி.எஃப் குழு அறிவித்திருந்தது.
எனவே இயக்குனர் பிரசாந்த் நீல் தற்சமயம் நடிகர் பிரபாஸை வைத்து இயக்கி வரும் சலார் திரைப்படமானது கே.ஜி.எஃப் 3 திரைப்படத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என பேச்சுக்கள் உள்ளன.

இந்த நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்க போவதாக அதிகாரபூர்வ தகவல்கள் வந்துள்ளன. என்.டி.ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்க போவதாக ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படமும் கூட கே.ஜி.எஃப்பின் அடுத்த பாகத்டோடு இணையும் கதையாக இருக்கலாம். ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ், யஷ் என மூன்று பெரிய கதாநாயகர்கள் கே.ஜி.எஃப் 3 இல் வர வாய்ப்புள்ளது என இணைய வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன.
