Connect with us

இனிமே நாங்க வச்சதுதான் சட்டம்!.. ஓ.டி.டி எடுத்த முடிவு!.. கடைசியில் நடிகர்களுக்குதான் ஆப்பா… லிஸ்டில் லால் சலாமும் இருக்கு!.

lal salaam ott

Latest News

இனிமே நாங்க வச்சதுதான் சட்டம்!.. ஓ.டி.டி எடுத்த முடிவு!.. கடைசியில் நடிகர்களுக்குதான் ஆப்பா… லிஸ்டில் லால் சலாமும் இருக்கு!.

cinepettai.com cinepettai.com

Tamilnadu OTT Companies: தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பிறகு சினிமாவின் வளர்ச்சி என்பது அதிக வளர்ச்சியை கண்டிருப்பதை பார்க்க முடியும். அதுவும் நடிகர்களின் சம்பளங்களில் பெரும் மாற்றத்தை பார்க்க முடியும்.

உதாரணமாக கொரோனாவிற்கு முன்பு நடிகர் விஜய் நடித்த திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் விஜய்யின் சம்பளம் 110 கோடியாக இருந்தது. அதற்கு இடைப்பட்ட சமயத்தில் இரண்டு திரைப்படங்களே நடித்தார் விஜய். ஆனால் தற்சமயம் அவரது சம்பளம் 200 கோடியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி நடிகர்களின் சம்பளம் திடீரென அதிகரிக்க ஓ.டி.டி நிறுவனங்களே காரணமாக அமைந்தது. கொரோனாவிற்கு முன்பு வரை இந்தியாவில் ஓ.டி.டி நிறுவனங்கள் அவ்வளவு பரவலாக இருக்கவில்லை. ஆனால் கொரோனா ஊரடங்கு ஏற்பட்டப்போது வீட்டில் இருந்தே படம் பார்ப்பதற்காக பலரும் ஓ.டி.டியை சப்ஸ்க்ரைப் செய்ய துவங்கினர்.

ott-1
ott-1

இதனையடுத்து இந்தியா முழுவதும் ஓ.டி.டி வணிகம் களை கட்டியது. ஓ.டி.டி நிறுவனங்களும் அப்போது எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்களை போட்டி போட்டு வாங்க துவங்கின. அப்போதுதான் அதிகமான வாடிக்கையாளர்களை அவர்கள் பெற முடியும் அல்லவா.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு அதிக பணம் கொடுக்க ஓ.டி.டி நிறுவனங்கள் தயாராக இருந்தன. இதனால் ஓ.டி.டி உரிமம் என புதிதாக ஒரு விஷயம் தமிழ் சினிமாவில் உருவானது. எனவே நடிகர்கள் அதையும் கணக்கில் கொண்டு தங்களது சம்பளத்தை உயர்த்தி வந்தனர்.

இந்த நிலையில் ஓ.டி.டி நிறுவனங்கள் இனி பெரிய படங்களுக்கு அதிக காசு தர முடியாது என முடிவெடுத்துள்ளன. ஏனெனில் கொரோனா சமயத்தில் வந்த அளவிற்கு தற்சமயம் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் வராத காரணத்தால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர்.

rajinikanth-lal-salaam
rajinikanth-lal-salaam

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்தை அதிக விலைக்கு விற்கலாம் என லைக்கா நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் அவ்வளவு தொகைக்கு அந்த படத்தை வாங்க எந்த நிறுவனமும் தயாராக இல்லாததால் லால் சலாம் திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமம் இன்னமும் விற்கபடாமலேயே இருக்கிறது.

மேலும் இதனால் அடுத்து விஜய்,ரஜினி,அஜித் மாதிரியான முன்னணி நடிகர்களின் சம்பளமும் குறைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

POPULAR POSTS

vijay
ajith
sundar c
bharath
samantha prabhas
vijayakanth SA chandrasekar
To Top