Cinema History
அர்த்தம் இல்லாம பாட்டு வரி எழுதுவாங்க!.. எஸ்.கேவை அப்போதே கணித்தாரா வாலி!.. கலாய்க்கும் நெட்டிசன்கள்…
தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டத்தில் துவங்கி சினிமாவின் வளர்ச்சி காலங்கள் முழுவதும் அதில் பயணித்து அதை நேரில் கண்டவர் கவிஞர் வாலி.
கண்ணதாசனுக்கு பிறகு பெரும் பாடலாசிரியராக தமிழ் சினிமாவிற்கு வந்தவர் வாலி. எம்.ஜி.ஆரில் துவங்கி அஜித் விஜய் வரையிலும் பல நடிகர்களின் பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். அவர் வளர்ந்து வந்த காலகட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பாடல் வரிகளுக்கு இருந்த முக்கியத்துவம் குறைந்ததை அவரால் காண முடிந்தது.
இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது அர்த்தமற்ற வார்த்தைகளைக் கொண்டு தற்சமயம் பாடல் வரிகள் எழுத துவங்கியுள்ளனர் முக்காலா முக்காப்புலா போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.
அப்படியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. உண்மையில் மக்கள் மத்தியில் அப்படியான பாடல்கள் வரவேற்பை பெரும்தான் ஆனால் பாடல் வழியாக நல்ல கருத்துக்களை கூறுவதை அதற்காக நாம் நிறுத்தி விட முடியாது. இதே மாதிரியான அர்த்தமற்ற பாடல் வரிகளை அந்த காலத்திலும் கூட எழுதினோம்.
ஆனால் அவற்றை ஊறுகாய் போல கொஞ்சமாக எழுதினோம் இப்பொழுது அதையே முழுவதுமாக எழுதுகின்றனர். இது நல்லது கிடையாது என்றால் வாலி. அவர் கூறியது போலவே தற்சமயம் சிவகார்த்திகேயன் தனுஷ் போன்ற நடிகர்களே பாடல் வரிகளை எழுதுகின்றனர்.
அந்த வரிகளில் எந்த நல்ல கருத்தையும் பார்க்க முடியவில்லை மாறாக அர்த்தமற்ற வரிகளே இருக்கின்றன. என்று இதற்கு பதில் அளித்து வருகின்றனர் நெட்டிசன்கள். எனவே அப்பொழுதே இந்த மாதிரியான அர்த்தமற்ற பாடல்கள்தான் வருங்காலத்தில் வரும் என்று கணத்திருக்கிறார் வாலி.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்