Connect with us

நான் கரெக்டாதான் பண்ணுனேன்.. உங்களுக்கு புரியலைனு சொல்லுங்க – எம்.ஜி.ஆரை கடுப்பேத்திய வாலி!.

MGR and vaali

Cinema History

நான் கரெக்டாதான் பண்ணுனேன்.. உங்களுக்கு புரியலைனு சொல்லுங்க – எம்.ஜி.ஆரை கடுப்பேத்திய வாலி!.

Social Media Bar

தமிழ் திரைத்துறையில் இருந்த முக்கியமான ஆளுமைகளில் நடிகர் எம்.ஜி.ஆரும் ஒருவர். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்த மிகப்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர்.

சொல்ல போனால் தமிழ் சினிமாவில் உள்ள மற்ற கலைஞர்களே பேசுவதற்கு பயப்படும் அளவிற்கு செல்வாக்கு மிகுந்தவராக எம்.ஜி.ஆர் இருந்தார். எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் நடிக்கும் படங்களில் எதை மாற்ற நினைத்தாலும் அதை எம்.ஜி.ஆர் மாற்றி விடுவார்.

முக்கியமாக அவர் நடிக்கும் படங்களின் பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். பாடல்களின் வரிகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் அல்லது இசை பிடிக்கவில்லை என்றாலும் உடனே அதை மாற்றி விடுவார். படத்தின் காட்சிகள் பிடிக்கவில்லை என்றாலும் கூட அதை மாற்றி அமைக்கும் உரிமை எம்.ஜி.ஆருக்கு இருந்தது.

இந்த நிலையில் நான் ஏன் பிறந்தேன் என்கிற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். அந்த படத்திற்கான பாடல் வரிகளை கவிஞர் வாலிதான் எழுதியிருந்தார். அதில் தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு என்கிற பாடல் வரும். அந்தப் பாடலில் ஒரு வரி எம்ஜிஆருக்கு அவளவாக புரியவில்லை.

உடனே வாலியை அழைத்த எம்.ஜி.ஆர் இந்த பாடலில் இந்த வரி ஒன்று சரியில்லை அதை கொஞ்சம் மாற்றி விடுங்கள் என்று கூறியுள்ளார். அதை கேட்டு கோபமான வாலி பாடல் வரி உங்களுக்கு புரியவில்லை என்று வேண்டுமானால் கூறுங்கள் வரி சரியில்லை என்று கூறாதீர்கள் என்று கூறிவிட்டார்.

இதனால் எம்ஜிஆருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. இந்த சண்டையால் இவர்கள் சில நாட்கள் பேசாமல் இருந்திருக்கின்றனர் இந்த விஷயத்தை வாலி ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார் அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு நிகராக கோபப்படும் மனிதராக வாலி இருந்திருக்கிறார்.

To Top