Tamil Cinema News
ஆசை மட்டும் பத்தாது!.. ஒண்ணுமே பண்ணாமல் எப்படி அரசியலுக்கு வர முடியும்.. விஜய் குறித்து பேசிய சர்கார் நடிகர்..
Vijay Political Entry : கேமிராவின் தொழில்நுட்பம் எப்போது வளர்ந்ததோ அப்போதே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருகிற சூழ்நிலையும் உருவானது. உலகம் முழுக்க பல நாடுகளில் நடிகர்கள் சினிமாவிற்கு வந்து ஆட்சியை பிடித்துள்ளனர். அதே போல தமிழ் நாட்டில் இதை முதன் முதலில் நடிகர் எம்.ஜி.ஆர் துவங்கி வைத்தார்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு எவ்வளவோ நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாலும் அவர்கள் யாராலும் அதை செய்ய முடியவில்லை. ஆனால் சரத்குமார், விஜயகாந்த் மாதிரியான சில நடிகர்கள் அரசியலில் முக்கிய இடத்தை பிடித்தனர் என கூறலாம்.

இந்த நிலையில் தற்சமயம் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவருடன் சர்க்கார் திரைப்படத்தில் நடித்த பழ.கருப்பையா அவர்கள் ஒரு மூத்த அரசியல்வாதி ஆவார். இவரது மகன்தான் பிரபல தொகுப்பாளர் கரு.பழனியப்பன். இவர் விஜய் குறித்து தன்னுடைய கருத்தை வெளியிட்டிருந்தார்.
அதில் கூறும்போது விஜய்க்கு அரசியலுக்கு வரவேண்டும் என்கிற ஆசை இருந்தால் மட்டும் பத்தாது. அதற்காக வெகுவாக உழைக்க வேண்டும். முக்கியமாக அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுக்க வேண்டும். இதெல்லாம் செய்யாமல் அரசியலுக்கு வருகிறேன் என வந்தால் அது அவருக்கே பலனளிக்காது என கூறியுள்ளார்.
