Connect with us

வெண்ணிலா ஐஸ்க்ரீமை கார் வெறுத்த கதை தெரியுமா?.. கார் ஓனருக்கு கொடுத்த சோதனை.. நிறுவனமே அசந்துப்போன சம்பவம்..!

Different News

வெண்ணிலா ஐஸ்க்ரீமை கார் வெறுத்த கதை தெரியுமா?.. கார் ஓனருக்கு கொடுத்த சோதனை.. நிறுவனமே அசந்துப்போன சம்பவம்..!

Social Media Bar

உலகில் விசித்திரமான விஷயங்கள் பலவற்றை பலவாறு கேட்டிருப்போம். ஆனால் ஒரு வாகனம் ஐஸ்கிரீமை வெறுத்த கதை ஒன்று அதிக பிரபலமாக இருந்து வருகிறது.

பெரும்பாலும் மனிதர்களுக்குதான் உணவுகளில் இந்த உணவுகள் பிடிக்கும் இந்த உணவுகள் பிடிக்காது என்று தரம் பிரிக்க தெரியும். வாகனங்களுக்கு உணர்ச்சியே கிடையாது. அவை வெறும் கருவிகள் மட்டும்தான். அப்படி இருக்கும் பொழுது தொடர்ந்து வெண்ணிலா ஐஸ்கிரீம் பிடிக்காததால் வாடிக்கையாளருக்கு தொல்லை கொடுத்திருக்கிறது ஒரு கார்.

Pontiac என்கிற கார் நிறுவனம் ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான கார் நிறுவனமாக இருந்தது. தொடர்ந்து புதுப்புது மாடல் கார்களை அது வெளியிட்டு வந்தது. இந்த நிலையில் போண்டியாக் நிறுவனத்தின் மோட்டார் செக்ஷனுக்கு திடீரென்று ஒரு புகார் ஒன்று வாடிக்கையாளரிடமிருந்து வந்திருந்தது.

கார் நிறுவனத்துக்கு வந்த புகார்:

அதில் வாடிக்கையாளர் கூறி இருந்த விஷயம் நகைச்சுவைக்குரிய விஷயமாக இருந்தது. அதில் அவர் என்னுடைய கார் வெண்ணிலா ஐஸ்கிரீமை வெறுக்கிறது என்று எழுதி இருந்தார். ஒரு கார் எப்படி வெண்ணிலா ஐஸ்கிரீமை வெறுக்க முடியும் என்று நினைத்த அந்த நிறுவனத்தினர் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

pontiac

pontiac

ஆனால் திரும்பவும் அந்த வாடிக்கையாளர்களிடமிருந்து கடிதம் வந்தது அதில் வாடிக்கையாளர் கூறும் பொழுது எங்கள் வீட்டில் தினமும் இரவு சாப்பாட்டிற்கு பிறகு ஐஸ்கிரீம் எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

எந்த ஐஸ்க்ரீம் பிளேவருக்கு அதிக ஓட்டு விழுகிறதோ அதை நான் போய் வாங்கி வருவேன். இப்படி நான் ஐஸ்கிரீம் வாங்க செல்லும் பொழுது மற்ற பிளேவர் ஐஸ்கிரீம் வாங்கும்பொழுது என்னுடைய கார் நன்றாக வேலை செய்யும்.

ஐஸ்க்ரீமை வெறுத்த கார்

நானும் வீட்டுக்கு வந்து விடுவேன். ஆனால் வெண்ணிலா ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வந்து காரை ஸ்டார்ட் செய்தால் மட்டும் கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. இந்த பிரச்சனையை சரி செய்து தரவும் என்று அவர் கூறியிருந்தார்.

இது வினோதமான ஒரு பிரச்சினையாக தெரிந்தாலும் வாடிக்கையாளருக்கு கார் வாங்கிச் சில மாதங்களே ஆகிறது என்பதால் அந்த கார் பிரச்சினையை சரி செய்து தர வேண்டிய நிலையில் நிறுவனம் இருந்தது. எனவே அவர்கள் ஒரு பொறியாளரை இதற்காக அனுப்பி வைத்தனர்.

pontiac

pontiac

அவர் தொடர்ந்து காரை செக் செய்த பொழுது அதில் எந்த ஒரு பிரச்சனையும் தெரியவில்லை. சரி என்று அவரே அந்த வாடிக்கையாளரை அழைத்துக் கொண்டு ஐஸ்கிரீம் கடைக்கு சென்று ஐஸ்கிரீம் வாங்கி இருக்கிறார்.

அதேபோல வெண்ணிலா ஐஸ்கிரீம் வாங்கும்போது மட்டும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. இது பொறியாளருக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பிறகு தொடர்ந்து இதில் உள்ள பிரச்சனை என்னவென்று அவர் பார்க்கும் பொழுது மற்ற ஐஸ்கிரீம் வாங்குவதை விடவும் வெண்ணிலா ஐஸ்கிரீமை மிகத் துரிதமாக வாடிக்கையாளர் வாங்கி வருவது தெரிந்தது.

உண்மையை கண்டுப்பிடித்த பொறியாளர்:

அதாவது மற்ற ஐஸ்கிரீமை செய்வதற்கு தாமதமாகுவதால் அவர் காத்திருந்து வாங்கி வருவார். ஆனால் வெண்ணிலா ஐஸ் கிரீம் ஏற்கனவே தயாரித்து வைத்திருப்பதால் அது உடனே கொடுத்து விடுவார்கள். இந்த நிலையில் காரில் வேப்பர் லாக் எனப்படும் ஒரு சிஸ்டம் இருக்கிறது.

அது ஒவ்வொரு முறை இவர் காரை நிறுத்தும் பொழுதும் சில நிமிடங்களுக்கு நேரங்களுக்குப் பிறகு ஓபன் ஆகிறது. அது லாக் நிலையில் இருக்கும் பொழுது கார் வேலை செய்யாது. வெண்ணிலா ஐஸ்கீரிமை அவர் சீக்கிரமே வாங்கி விடுவதால் வேப்பர் லாக் அந்த சமயத்தில் லாக் நிலையிலேயே இருந்துள்ளது.

இதனால்தான் வெண்ணிலா ஐஸ் கிரீம் வாங்கும்போது மட்டும் அந்த கார் வேலை செய்யாமல் இருந்திருக்கிறது. பிறகு இதனை கண்டுபிடித்து அவர்கள் தயாரித்த காரில் அடுத்து இந்த பிரச்சனை வராமல் சரி செய்து இருக்கின்றனர். இந்த நிறுவனத்தினர் சின்ன சின்ன வாடிக்கையாளரின் கருத்துக்கள் கூட பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

Continue Reading
Advertisement
You may also like...
To Top