Bigg Boss Tamil
பிக்பாஸில் அந்த நடிகை இல்லையாம்.. நம்ப வச்சி ஏமாத்தீட்டிங்களே.. புலம்பும் ரசிகர்கள்..!
பிக் பாஸ் சீசன் 8 இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கிறது. விஜய் சேதுபதிதான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
அதிகபட்சம் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்டன. பிக் பாஸ் வீட்டிற்கான வேலைகளும் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மக்கள் மத்தியிலும் பிக் பாஸில் கலந்து கொள்ளப் போகும் பிரபலங்கள் குறித்து சில அனுமானங்கள் இருந்தன. அந்த அனுமானங்களின்படி தமிழில் பிரபல நடிகையாக ஒரு காலகட்டத்தில் இருந்த நடிகை பூனம் பஜ்வா பிக் பாஸ்க்கு வருகிறார் என்று பரவலாக பேசிக்கொண்டு இருந்தனர்.
தேர்ந்தெடுக்கப்படாததற்கு இதுதான் காரணம்:
ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே பூனம் பஜ்வாகிருக்கு தமிழில் வரவேற்புகள் இல்லை. ஒருவேளை அவர் பிக் பாஸில் கலந்து கொள்ளும் பட்சத்தில் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் பூனம் பஜ்வாவிற்கு அவ்வளவாக தமிழ் தெரியாது. ஒரு வேலை அவர் பிக்பாஸில் கலந்து கொண்டாலும் கூட அவர் தொடர்ந்து நிகழ்ச்சி முழுக்க ஆங்கிலத்தில் தான் பேசி வருவார். அது ஆடியன்ஸுக்கு அவ்வளவாக புரிந்து கொள்ள முடியாததாக இருக்கும்.
இதன் காரணமாக பூனம் பஜ்வாவை பிக் பாஸ் குழு தேர்ந்தெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இது ரசிகர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. வெகுவாக பூனம் பஜ்வா வருவார் என்று காத்திருந்த நிலையில் அவர் இப்படி பிக் பாஸ்க்கு வராமல் போய்விட்டாரே என்று அவர்கள் புலம்பி வருகின்றனர்.
