நடிகைகள் குறித்த லீக் வீடியோக்கள் என்பது தற்சமயம் இணையங்களில் தொடர்ந்து அதிக பேச்சுக்கு உள்ளாகும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது சமீபத்தில் கூட நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிக பிரபலம் அடைந்தது.
ஆனால் ஓவியா அதை கையாண்ட விதம் பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது. அதை ஒரு விஷயமாகவே அவர் கண்டு கொள்ளவில்லை என்று கூறலாம்.
இதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் இடத்திலிருந்து அவர் விலகி இருக்கிறார். இந்த நிலையில் ஜீவா நடித்த வரலாறு முக்கியம் திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தார் நடிகை ப்ரக்யா நாகரா. இவரை குறித்தும் இப்படியான ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.
லீக் வீடியோ:
தமிழில் ஒரு திரைப்படத்தில்தான் இவர் நடித்திருக்கிறார் ஆனால் தற்சமயம் தெலுங்கு, மலையாளம் என்று மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் பெற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய லீக் வீடியோ என்று கூறி வெளியான வீடியோ குறித்து இவர் பதில் அளித்திருக்கிறார்.
அதில் அவர் கூறும்போது இதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறக்க நினைக்கிறேன் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இப்படி சில மோசமான விஷயங்களையும் செய்து விடுகிறது. ஏதோ ஒரு கெட்ட குணம் கொண்டவர்கள் ஏ.ஐ முறையை பயன்படுத்தி இந்த மாதிரியான வீடியோக்களை தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர்.
பெண்களுக்கு தொடர்ந்து இந்த மாதிரி பிரச்சினைகள் நடக்க கூடாது என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று இது குறித்து கூறியிருக்கிறார் ப்ரக்யா நாக்ரா.