News
ஜிவியை அப்படி யூஸ் பண்ணிட்டு அவர் மனைவி இப்போ இப்படி பண்ணக்கூடாது!.. கொந்தளித்த பத்திரிக்கையாளர்..
தனது 17வது வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். அவர் அறிமுகமான முதல் திரைப்படமான வெயில் படத்திற்கே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதிலேயே பாடல்கள் நிறைய வெற்றியையும் கொடுத்தன. தொடர்ந்து வரிசையாக சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கிய ஜிவி பிரகாஷ் பிறகு கதாநாயகனாகவும் நடிக்க துவக்கினார். இந்த நிலையில் அவரது சிறு வயது முதலே சைந்தவி என்ற பெண்ணை காதலித்து வந்தார் ஜி.வி பிரகாஷ் .
திருமண வாழ்க்கை:
11 வருடங்களுக்கு முன்பு அவரை திருமணமும் செய்தார். அவர்கள் திருமண வாழ்க்கை நன்றாகதான் சென்று கொண்டிருந்தன. ஆனால் திடீரென்று ஒரு நாள் இருவரும் பிரிந்து விடுவதற்கு முடிவு செய்தனர். அதனை அடுத்து ஜி.வி பிரகாஷ் தனது மனைவியை பிரிய போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அப்போது முதல் அது ஒரு சர்ச்சையான விஷயமாக மாறியது. கொஞ்ச நாட்கள் காதலித்து திருமணம் செய்திருந்தால் பரவாயில்லை. குழந்தை பருவத்தில் இருந்து காதலித்து வந்தவர்களே திருமணம் செய்து ஏன் விவாகரத்து பெறுகிறார்கள் என்கிற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வந்தன.
விவாகரத்து:
இந்த நிலையில் இது குறித்து பத்திரிக்கையாளர் உமாபதி பேசும்பொழுது சில சர்ச்சையான தகவல்களை பேசி இருக்கிறார். சைந்தவி மாதிரியான பெண்கள் ஒருவரின் வளர்ச்சியை வைத்து அவர்கள் வளர்ந்து கொள்வார்கள் கடைசியில் அவரை பிடிக்கவில்லை.
என்னுடைய வாழ்க்கை பறிபோய்விட்டது சுதந்திரம் போய்விட்டது என்று கூறுவார்கள். ஆனால் பிரபலமாக இருக்கும் பொழுது அந்த நடிகர்களை யூஸ் செய்து கொள்வார்கள். சுதந்திரம் வேண்டுமென்றால் அவர்கள் சொந்த பணத்தில் தான் வாழ வேண்டும்,

பிரபலங்களை திருமணம் செய்து கொண்டு சொகுசாக வாழ்க்கை வாழ்ந்து விட்டு கடைசியில் தனியாக விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். ஜீவியை பிரிந்து வந்த சைந்தவி தற்சமயம் அவரிடம் நிறைய பணம் வாங்கி இருக்கிறார்.
அவருடன் வாழும் காலத்திலும் நிறைய பணம் செலவு செய்து இருக்கிறார் என்று பேசி இருந்தார் உமாபதி. ஜிவி ரசிகர்கள் மத்தியில் இந்த பேச்சுக்கு வலுவான எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. விவாகரத்து என்பது கணவன் மனைவியின் தனிப்பட்ட விஷயம் அது குறித்து பேசுவதற்கு பத்திரிகையாளர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவர்கள் கேட்டு வருகின்றனர்.
