என் நண்பன் கூட தூங்க ஆசைப்பட்டேன்..! பள்ளி காலத்திலேயே விபரீத ஆசை..! பிரியா பவானி சங்கர்..
டிவி சேனல் மூலமாக அறிமுகமாகி இப்போது பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சிகளில் முதலில் செய்தி வாசிப்பாளராக பணிப்புரிந்து வந்தார். அந்த சமயங்களில் அவர் மிகவும் அழகாக இருந்த காரணத்தினால் அவருக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அப்படியே அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பிரியா பவானி சங்கர் அப்படியே தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார். முதன் முதலாக மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அது அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்தார். இந்த நிலையில் தன்னுடைய சின்ன வயது நட்பை ஒரு பேட்டியில் அவர் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது எனக்கு சிறு வயதில் மணிகண்டன் என ஒரு நண்பன் இருந்தான்.
அவனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அப்போது எல்.கே.ஜி படித்து கொண்டிருந்தேன். மதிய வேளைக்கு மேல் எல்.கே.ஜியில் தூங்க வைத்து விடுவார்கள். அப்போது பசங்களை தனியாகவும் பெண்களை தனியாகவும் படுக்க வைப்பார்கள்.
எனக்கு அவனை மிகவும் பிடிக்கும் என்பதால் அவனோடு படுக்கவே நான் ஆசைப்படுவேன். ஆனால் என் டீச்சர் அதற்கு விடமாட்டார்கள். பிறகு அப்பாவிடம் பேசி அவனோடு படுக்க வேண்டும் என பெரிய பெட் ஷீட்டை எடுத்து சென்றேன்.
அப்போதும் என் டீச்சர் உஷாராக என்னை ஒரு பக்கமும் அவனை ஒரு பக்கமும் திரும்பி படுக்க வைத்தார். அதற்கு பிறகு நான் பாண்டிச்சேரிக்கு சென்றுவிட்டேன். செல்லும்போது கூட மணிகண்டனை பிரிகிறோமே எனதான் கவலையாக இருந்தது.