நடிக்கத்தெரியாத ஆள கொண்டுவந்து படத்துல போட்டுட்டீங்களே… கொந்தளித்த ரஜினி!…
Rajini and Surya: ரஜினி தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார். இவர் பார்த்து பாராட்டியவர்கள் இன்று வேற லெவல்ல முன்னேறி போயிட்டிருக்காங்க.
இவர் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். சிவாஜி, எம்.ஜி.ஆர் இவர்களுக்கு அடுத்து தமிழ் சினிமாவின் பெரிதாகப் பேசப்படும் நட்சத்திரம் ரஜினிகாந்த்.
நடிப்பு ஜாம்பவானிடம் பாராட்டு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. அவருக்கு இணையாக ஒருவர் நடிக்கிறார் என்றால் மட்டுமே அவரின் பாராட்டு கிடைக்கும்.

அப்படி ஒரு மேடையில் பேசும் பொழுது நடிகர் சூர்யாவின் முதல்படமான நேருக்கு நேர் படம் பற்றி பகிர்ந்து கொண்டார். அவர் அந்த படத்தை பார்த்த போது இவரிடம் என்ன இருக்கிறது என்று நடிக்க வந்துவிட்டார், வசனங்கள் பேச முடியவில்லை, கேமரா முன் சிரிக்கத் தெரியவில்லை, நடிப்பே வரவில்லை இவர் எப்படி இந்த தமிழ்சினிமாவில் வெற்றிபெற போகிறார் என்று நினைத்தார்.
ஆனால் அதற்குப் பின்பு சூர்யாவின் முக்கியமான படங்களான காக்க காக்க, பிதாமகன், நந்தா போன்ற படங்களை பார்த்துவிட்டு சினிமாவில் நிறைய கற்றுக்கொண்டுள்ளார்.

நிறைய படங்களில் விதவிதமான கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆர்ம்பித்துவிட்டார். அவருக்கு அனுபவம் கூடிவிட்டது அவரால் நிச்சயம் உயரத்தை தொட முடியும் என்று பாராட்டி பேசியிருக்கிறார்.
சூர்யா அவருடைய தந்தையின் பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும் இல்லாத ஒரு திறமையை தன் உழைப்பால் உருவாக்க முடியும் என்பதை செய்து காட்டியிருக்கிறார் சூர்யா என்று மேடையில் சூர்யாவின் திறமையை பாராட்டியுள்ளார் ரஜினி. இன்றைய காலத்திற்கு சூர்யா, விஜய் மற்றும் அஜித்திற்கு இணையாக வளர்ந்துவந்துள்ளார்.